உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 29, 2010

குடிசைகள் கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது: ஆட்சியர் அறிவிப்பு

கடலூர்:

            டலூர் மாவட்டத்தில், கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் குடிசைகள் கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

              கடலூர் மாவட்டத்தில் நிரந்தர வீடுகள் கட்டப்பட வேண்டிய மொத்த குடிசை வீடுகள் எண்ணிக்கைக்கான கணக்கெடுப்பு 29-3-2010 (திங்கள்கிழமை) அன்று தொடங்குகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள 681 ஊராட்சிகளிலும் கணக்கெடுப்பு நடைபெறும். ஒவ்வொரு ஊராட்சியிலும் கணக்கெடுப்பு, கிராம நிர்வாக அலுவலர், மக்கள் நலப் பணியாளர் மற்றும் ஊராட்சி உதவியாளர் அடங்கிய குழுவால் மேற்கொள்ளப்படும். கணக்கெடுப்புக் குழுவுக்கு 2 கட்டப் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. கணக்கெடுப்புப் பணியை 15-5-2010க்குள் இறுதி செய்திட திட்டமிடப்பட்டு உள்ளது. கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் 2010-11ம் ஆண்டில் 3 லட்சம் வீடுகள் கட்டப்படும். ஒவ்வொரு வீடும் 200 ச.அடி பரப்பளவு கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் அலகுத் தொகை ரூ. 60 ஆயிரம். இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தைப் போலவே இத்திட்டத்திலும் பயனாளிகள் தங்கள் வீடுகளைக் கட்டிக் கொள்வர். ஒப்பந்தப்புள்ளி ஏதும் கோரப்பட மாட்டாது. 2009 வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பில் உள்ள புதிய கதவு இலக்கமே, வீட்டின் அடையாள எண்ணாகக் கருதப்படும். கணக்கெடுப்பின்போது ரேஷன் கார்டு, மின்இணைப்பு, வீட்டுவரி விதிப்பு எண், நில உரிமைக்கான பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை கணக்கெடுப்புக் குழுவிடம் காண்பிக்கத் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். கணக்கெடுப்பின்போது குடும்பம் கண்டிப்பாக அவ்வீட்டில் குடியிருக்க வேண்டும்.  முதல் கட்டமாக இன்று 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள 399 ஊராட்சிகளில் கணக்கெடுப்பு தொடங்குகிறது. கணக்கெடுப்புக் குழுவிடம் சரியான தகவல்களைத் தந்து, பணி சிறப்பாக அமைய பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுகொள்ளப் படுகிறார்கள் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior