உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 29, 2010

எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிர்வாக தவறுகள் தடுக்கப்பட்டுள்ளது : ஆட்சியர் அசிமா மரியம் தகவல்


சேத்தியாத்தோப்பு : 

                  விவசாயிகளிடம் பணம் வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ள கரும்பு அதிகாரிகள் ஒரே அலுவலகத்தில் தொடர்ந்து பணியாற்றுவதை தடுக்க வேண் டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
 
                 சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஆட்சியர் அசிமா மரியம் தலைமை தாங்கினார். தலைமை கரும்பு அலுவலர் (பொறுப்பு) ராஜதுரை முன் னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கரும்பு விவசாயிகள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளான ராமானுஜம், வேல் முருகன், அப்பாதுரை, குஞ்சிதபாதம், இளவரசன், ஆதிமூலம், பன்னீர்செல்வம்,  குணசேகரன்,  ராமசாமி, பாபு, செந்தில் உட்பட பலர் பேசினர்.
 
                  அப்போது, விவசாயிகளிடம் பணம் வாங்கும் நோக்கத்தில் கரும்பு அலுவலர்கள் தொடர்ந்து ஒரே கோட்டத்தில் பணியாற்றி வருவதால், விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு பயந்தே பல விவசாயிகள் கரும்பு பயிரிடுவதையே விட்டுவிட்டனர். இந்த நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விதைக் கரணையை சலுகை விலையில் வழங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு அரை கிலோ வீதம் சர்க்கரை வழங்க வேண்டும். கரும்பு வெட்டி அனுப்பிய ஒரு வாரத்திற்குள் பணத்தை வழங்க வேண் டும். சர்க்கரை கட்டுமானத்தை அதிகரிக்க ரசாயன துறையில் உரிய கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என பேசினர்.
 
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆட்சியர் ஆசியா மரியம் பதிலளிக்கையில், 

                   ஆலையில் இதுவரை நடந்த பல தவறுகள் தடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் கடந்த ஒரு மாதத்தில் உடனுக்குடன் தீர்வு காணப் பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் ஆலையின் நிர் வாக ரீதியிலான அனைத்து பிரச்னைகளையும் உடனுக்குடன் தீர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்க் கரை துறை ஆணையம் மற்றும் அரசு மூலம் தீர்வுகான வேண்டிய பிரச்னைகளை தனிக் கவனம் செலுத்தி அவற்றை விரைவாக முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை கரும்புத் துறை, கணக்குத்துறை, ரசாயன துறை, பொறியியல் துறை என தனித்து இயங்கியவர்களை ஒருங் கிணைத்து செயலாற்ற நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. கரும்பு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம், கருத்தரங்கு நடத்தப்பட உள்ளது என்றார். அலுவலக மேலாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior