கடலூர் :
வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது பற்றி நுகர்வோர் சேவை மையத்தின் மூலம் ஆலோசனை கேட்டு பயன்பெறுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் செயல்பட்டு வரும் மாநில நுகர்வோர் சேவை மையத்தில் இணைய தளத்தின் சேவை வாயிலாக நுகர்வோருக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கங்கள், நுகர்வோர்கள் அளிக்கும் புகார்களுக்கு ஆலோனைகள் வழங்கப்படுகிறது. நுகர்வோர் அமைப்புகளின் கோரிக்கையினை ஏற்று மாநில நுகர்வோர் சேவை மையம் ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை குறிப்பிட்ட பொருள் அல்லது சேவையைப் பெறும் முன்னர் நுகர்வோர்களுக்கு எழும் பிரச்னைகளுக்கு ஆலோசனை மற்றும் வழிமுறைகளை தொலைபேசி வாயிலாக அளித்து வருகிறது.
நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு நுகர்வோர் கல்விக்காக வங்கியிலிருந்து கடன் பெறும் முறை மற்றும் அதற்காக விண்ணப்பித்தல் தொடர்பான ஆலோசனைகள் கூறப்பட்டது. அப்போது வங்கியில் கல்விக்கடன் பெறும்போது நுகர்வோர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கான உரிய விளக்கங்களை நுகர்வோர்கள், மாநில நுகர்வோர் சேவை மையத்தின் தொலைபேசி எண் 044-28592828 மூலம் தொடர்பு கொள்ளும்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூத்த அலுவலர்களும், நுகர்வோர் அமைப்புகளின் ஆலோசகர் விளக்கம் வழங்குவர். நுகர்வோர்கள் இம் மையத்தின் சேவையினை பயன்படுத்தி வங்கிகளில் கல்விக்கடன் பெறுவது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக