பண்ருட்டி:
பண்ருட்டியில் நவீன எரிவாயு தகனமேடை துணை முதல்வர் திறந்து வைத்தும் பயன்பாட்டிற்கு வராமல் அரசு நிதி வீணாகி வருகிறது. பண்ருட்டி கெடிலம் ஆற்றங்கரை அருகே நகராட்சி சார்பில் 43 லட்சம் ரூபாய் (20 லட்சம் அரசு மானியம், 23 லட்சம் நகராட்சி நிதி) செலவில் கடந்த 2007-2008ம் ஆண்டு நவீன எரிவாயு தகன மேடை கட்டப்பட்டது. பணிகள் முடிந்து இரண் டாண்டு ஆககிறது. எரிவாயு தகனமேடை கெடிலம் ஆற்றங்கரை அருகே உள்ளதால் மழை, வெள்ள காலத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால் 10 லட்சம் செலவில் ஓராண்டிற்கு முன் துவங் கப்பட்ட இந்த பணி இன்னமும் முழுமை பெறவில்லை. அதுபோல் கட்டடத்திற்குள் சுத்திகரிப்பு தொட் டியும் கட்டவில்லை. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 20ம் தேதி நடந்த காடாம்புலியூர் சமத்துவபுரத்தை திறந்து வைத்த துணை முதல்வர் ஸ்டாலின், பண்ருட்டி நகராட்சி நவீன தகன மேடையையும் திறந்து வைத்தார்.
விழா முடிந்து 6 மாதமாகியும் இந்த தகன மேடை இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் அரசு நிதி வீணாகி வருகிறது. இதற்கு நகராட்சி அதிகாரிகள் அலட்சியம் தான் காரணம்.
இதுகுறித்து அ.தி. மு.க., கவுன்சிலர் கமலக் கண்ணன் கூறியதாவது:
நவீன எரிவாயு தகனமேடைக்கு வாங்கிய பொருட்கள் தரமில்லை. சுற்றுசுவர் மற்றும் பிளாட்பார்ம் அமைக்க 10 லட்சம் ரூபாய் செலவில் ஒதுக்கீடு செய்து காம்பவண்டு சுவர் பணிகள் கூட முடியவில்லை. பிளாட்பார்ம் அமைக்கவில்லை, இதில் ஊழல் நடந்துள்ளது இதுகுறித்து மேலதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக