சிதம்பரம்:
கடலூரில் இன்று (17ம் தேதி) அறிவித்துள்ள மறியலில் பங்கேற்பதில்லை என தொ.மு.ச., (டாஸ்மாக்) தீர்மானித்துள்ளது. சிதம்பரத்தில் டாஸ்மாக் பணியாளர் முன்னேற்ற சங்க (தொ.மு.ச) செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பொருளாளர் கார்த்திகேயன் வரவேற் றார். துணை செயலாளர்கள் சக்கரவர்த்தி, மணிவண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கடந்த ஏழு ஆண்டாக தற்காலிக பணியில் உள்ள டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பொதுத்துறை நிர்வாகத்திற்கு வழங்கப்படுகிற சலுகைகள் வழங்க முதல் வரை கேட்டுக்கொள்வது. டாஸ்மாக் பணியாளர் முன்னேற்ற சங்கம் கேட்டுக் கொண்டதன் பேரில் அரசு பணி நிரந்தரம் செய்ய பல வழிகளில் தயார் செய்து வரும் நிலையில் கடையடைப்பு போன்ற போராட்டங்கள் மேலும் நமது கோரிக்கை நிறைவேற்ற காலதாமதத்தை ஏற்படுத்தும். எனவே தொ.மு.ச (டாஸ்மாக்) எந்த போராட்டத்திலும் பங்கேற்காது. அரசின் பக்கம் வலுவாக நின்று கோரிக்கையை வென்றெடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக