உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 17, 2010

உடைந்த மதகால் வீணாகும் தண்ணீர் மன்னம்பாடி விவசாயிகள் பாதிப்பு

விருத்தாசலம்: 

                 மன்னம்பாடி பெரிய ஏரி மதகு கடந்த மூன்று ஆண்டாக உடைந்து கிடப்பதால் நெல் அறுவடை வரை தண்ணீர் இன்றி விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். விருத்தாசலம் அடுத்த மன்னம்பாடி கிராமத்தில் 73 எக்டேர் பரப்பளவில் உள்ள பெரிய ஏரி மூலம் 300 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. இதற்காக அமைத்துள்ள மூன்று மதகுகளில் சின்ன மதகு மூன்றாண்டிற்கு முன் உடைந்தது. அதனை இதுவரை சரி செய்யாததால், ஏரிக்கு வரும் மழை நீர்  சேமித்து வைக்க முடியாமல், உடைந்த சின்ன மதகு வழியாக வடிந்து விடுகிறது. இதனால் ஏரி பாசனத்தை நம்பி பயிரிட்டும் விவசாயிகள்  அறுவடை வரை போதிய தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். ஏரி தண்ணீர் பற்றாகுறை ஏற்படும்போது விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கிடையே நெடுந் தொலைவில் இருக்கும் கிணறு, போர்வெல் மூலமாக தண்ணீர் இறைத்து நெல் அறுவடை செய்கின்றனர்.

                   நெற்பயிரில் கதிர் பிடிக்கும் நேரத்தில் தண்ணீர் பற்றாகுறை ஏற்படுவதால் விளைச்சல் பாதித்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் ஏரி வற் றியுள்ளது. தற்போது உடைந்து கிடக்கும் சின்ன மதகை சரி செய்தால் வரும் ஆண்டில் விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும். அதுபோல் தண்ணீர் கசிந்து கொண்டிருக்கும் நடு மதகையும் சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior