உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 17, 2010

இயற்கை பேரிடர்களை தடுக்க நடப்பட்ட மரக்கன்றுகள் கருகும் அவலம்

கிள்ளை: 

                   இயற்கை பேரிடர்களை தடுக்க 100 எக்டேர் பரப்பளவில் நடப்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பின்றி கருகி வருகின்றன. சுனாமியால் பாதித்த கிள்ளை முழுக்கு துறை பகுதியில் தேசிய காடு வளர்ப்புத் திட்டத்தில் 100 எக் டேர் பரப்பளவில் விழுப்புரம் வனவளர்ச்சி முகமை சார்பில் சுரப் புண்ணை, (அவிசீனியா) கண்டன் செடிகள் கடந்த 2007ம் ஆண்டு நடப் பட்டன. இதற்காக 20 எக்டேர் பரப் பளவில் ஐந்து பகுதியாக பிரித்து, செயற்கை மறு உற்பத்தி தோட்டம், முழுக்குத்துறையில் அமைக்கப்பட்டது. முழுக்குத்துறை உப்பனாற்றில் இருந்து ஒவ்வொரு 20 எக்டேர் பரப்பளவிற்கும் முதன்மைக் கால்வாய் 800 மீட்டர் தொலைவில் மூன்றடி ஆழத்திலும், துணை கால்வாய் 6 ஆயிரத்து 200 மீட்டர் தொலைவிற்கு இரண்டரை அடி ஆழத்தில் வெட்டி தண்ணீர் விடப்பட்டது. வாய்க்காலின் இருபுறமும் உள்ள கரைப்பகுதியில் இரண்டு அடிக்கு ஒரு சுரப்புண்ணை செடியும் அதன் மேல்பரப்பில் மூன்று அடிக்கு ஒரு கண்டன் செடியும் நடப்பட்டன.

                   செடிகள் செழிப்பாக வளர்ந்த நிலையில் கடந்த 2008ம் ஆண்டு தோட்டத்தின் உள்ளே துணைக் கால் வாய்களின் ஓரத்தில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் உமரி, வங்கராசி உள்ளிட்ட கொடிகள் நடப்பட்டது. தற்போது நூறு ஹெக்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள காடு வளர்ப்பு தோட்டத்தில் சரியான வேலி இல்லாததால் மாடுகள் புகுந்து செடிகளை அழித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளே வெட்டப்பட்ட கிளை வாய்க்கால்கள் தூர்ந்து  வாய்க்கால் கரையில் நடப்பட்ட உமரி உள்ளிட்ட கொடிகள் காய்ந்துள்ளதுடன், ஆற்றில் இருந்து தண்ணீர் செல்லமுடியாத நிலையில் கால்வாய்களும் தூர்ந் துள்ளது. இதனால் செடிகள் வளர்ச்சியில்லாமல் உள்ளது.  எனவே இப்பகுதியில் முறையாக வேலி அமைத்து நடப்பட்டுள்ள காடுகளை பாதுகாக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior