உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 17, 2010

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றி




கோல்கட்டா:

           ஐ.பி.எல்., தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வெற்றிக்கணக்கை துவக்கியது. நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில் கங்குலியின், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை, 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
 
                  20 ஓவரில் கோல்கட்டா அணி, 109 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இஷாந்த் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தோனி ஆட்டநாயகன் விருது வென்றார்.

           மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் இந்தியாவின் பல இடங்களில் நடக்கிறது. இதில் சென்னை, பெங்களூரு, டில்லி, மும்பை உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன. இத்தொடரின் எட்டாவது லீக் போட்டி நேற்று கோல்கட்டாவில் நடந்தது. தனது முதல் போட்டியில் தோல்வியடைந்து இருந்த தோனி தலைமையிலான, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டு போட்டிகளில் வென்று இருந்த கங்குலியின் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை சந்தித்தது. "டாஸ்' வென்ற சென்னை கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.
ஹைடன் சோகம்:
                சென்னை அணிக்கு ஹைடன், முரளி விஜய் துவக்கம் தந்தனர். கடந்த போட்டியில் "மங்கூஸ் பேட்' கைகொடுக்காததால், இம்முறை வழக்கமான பேட்டுடன், ஹைடன் களமிறங்கினார். இந்த ஆண்டு துவக்கத்தில் கோல்கட்டா அணியால் அதிக தொகைக்கு (ரூ. 3.43 கோடி) ஏலம் எடுக்கப்பட்ட நியூசிலாந்தின் பாண்ட், முதல் ஓவரை சிக்கனமாக வீசினார். மறுமுனையில் இஷாந்தின் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்து, முரளி விஜய் அதிரடியை துவக்கினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹைடன் (1), மீண்டும் ஏமாற்றினார்.
ரெய்னா ஏமாற்றம்:
             பின் முரளி விஜயுடன், ரெய்னா இணைந்தார். முரளி விஜய் 33 ரன்களில் வெளியேறினார். சற்று திணறிய ரெய்னாவும் (18) நிலைக்கவில்லை. பவுலிங்கிற்கு ஒத்துழைத்த ஆடுகளத்தில், அடுத்தடுத்து விக்கெட்டு விழ, தோனி, பத்ரிநாத் ஜோடி பொறுமையை கையாண்டது.
36 பந்து 83 ரன்கள்:
               14 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்த ஜோடி அதிரடிக்கு மாறியது. கேப்டன் தோனி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். சுக்லா, பாண்ட் ஓவர்களில் தலா 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய தோனி, 28 பந்துகளில் அரைசதம் கடந்தார். சென்னை அணி, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் குவித்தது. தோனி 66 ( 3 சிக்சர், 6 பவுண்டரி), பத்ரிநாத் 43 (ஒரு சிக்சர், 3 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர்.
சரிந்த துவக்கம்:
எட்டி விடும் இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு மனோஜ் திவாரி, ஹாட்ஜ் துவக்கம் கொடுத்தனர். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த இந்த இருவரும், இம்முறை அணியை கைவிட்டனர். மார்கலின் இரண்டாவது பந்திலேயே "டக்' அவுட்டாகி, சரிவை துவக்கி வைத்தார் ஹாட்ஜ். தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள் அடித்த, மனோஜ் திவாரி, அடுத்த பந்தில் போல்டானார். அதிரடி காட்டிய சாஹா, 22 ரன்களில் வீழ்ந்தார்.
கைவிட்ட கங்குலி:
                   பின் வந்த ஓவைஸ் ஷா (5), பாலாஜியிடம் சிக்கினார். அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட, கேப்டன் கங்குலி, சிக்சருக்கு ஆசைப்பட்டு, கெம்ப் பந்தில் மார்கலிடம் பிடிபட்டார். 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறிய சோகத்தில் இருந்த கோல்கட்டா அணிக்கு, மாத்யூஸ் (6), ரோகன் கவாஸ்கர் (2) விரைவில் அவுட்டாகி, ரசிகர்களை சோதித்தனர்.
சென்னை வெற்றி:
       பின் வந்த சுக்லா (19), பாண்ட் (1), முரளி கார்த்திக் (21) ஏமாற்ற, கோல்கட்டா அணி,
சபாஷ் தோனி
          கோல்கட்டா ஆடுகளம், நேற்று பவுலிங்கிற்கு நன்கு ஒத்துழைத்தது. 3 விக்கெட்டுக்கு 55 ரன்கள் என்ற நிலையில் களமிறங்கிய தோனி, பத்ரிநாத்துடன் இணைந்து, கேப்டனுக்குரிய பொறுப்புடன் விளையாடினார். இவர், 33 பந்தில் 66 ரன்கள் குவித்தார். நான்காவது விக்கெட்டுக்கு அவுட்டாகாமல் 109 ரன்கள் எடுத்த இந்த ஜோடி, கடைசி 6 ஓவரில் 83 ரன்கள் குவித்தது.

பத்ரியுடன் மோதல்
               நேற்றைய ஆட்டத்தில் 19.4 ஓவரில் இஷாந்தின் பந்தை, "மிட் விக்கெட்' திசையில் அடித்தார் தோனி. முதல் ரன்னை வேகமாக எடுத்த இவர், இரண்டாவது ரன்னுக்காக, மிக வேகமாக ஓடிவந்த போது, எதிர்பாராத விதமாக பத்ரிநாத்துடன் மோதினார். வலியால் துடித்த பத்ரிநாத், கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார்.

ஸ்கோர்போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
முரளி விஜய்(ப)சுக்லா 33(26)
ஹைடன்(ப)இஷாந்த் 1(8)
ரெய்னா(ப)ஹாட்ஜ் 18(20)
பத்ரிநாத்-அவுட் இல்லை- 43(33)
தோனி-அவுட் இல்லை- 66(33)
உதிரிகள் 3
மொத்தம் (20 ஓவரில் 3 விக்.,)  164
விக்கெட் வீழ்ச்சி: 1-16(ஹைடன்), 2-53(முரளி விஜய்), 3-55(ரெய்னா).
பந்து வீச்சு: பாண்ட் 4-0-33-0, இஷாந்த் 4-0-38-1, மாத்யூஸ் 3-0-29-0, சுக்லா 4-0-37-1, முரளி கார்த்திக் 4-0-21-0, ஹாட்ஜ் 1-0-4-1.
கோல்கட்டா நைட் ரைடர்ஸ்
ஹாட்ஜ்(கே)அஸ்வின்(ப)மார்கல் 0(2)
திவாரி(ப)கோனி 8(3)
கங்குலி(கே)மார்கல்(ப)கெம்ப் 11(20)
சாஹா(ப)பாலாஜி 22(13)
ஓவைஸ் ஷா(கே)தோனி(ப)பாலாஜி 5(4)
மாத்யூஸ்-எல்.பி.டபிள்யூ.,(ப)கெம்ப் 6(13)
சுக்லா(கே)மார்கல்(ப)முரளிதரன் 19(16)
ரோகன்(கே)முரளிவிஜய்(ப)கெம்ப் 2(8)
பாண்ட்(ப)அஸ்வின் 1(2)
முரளி கார்த்திக்-ரன் அவுட்- 21(20)
இஷாந்த்-அவுட் இல்லை- 6(15)
உதிரிகள் 8
மொத்தம் (19.2 ஓவரில் ஆல் அவுட்) 109
விக்கெட் வீழ்ச்சி: 1-0(ஹாட்ஜ்), 2-8(திவாரி), 3-34(சாஹா), 4-46(ஓவைஸ் ஷா), 5-55(கங்குலி), 6-69(மாத்யூஸ்), 7-79(ரோகன்), 8-82(சுக்லா), 9-84(பாண்ட்), 10-109(முரளி கார்த்திக்).
பந்து வீச்சு: மார்கல் 2-1-6-1, கோனி 3-0-33-1, பாலாஜி 2.2-0-9-2, முரளிதரன் 4-0-16-1, கெம்ப் 3-0-12-3, அஸ்வின் 4-0-22-1, ரெய்னா 1-0-6-0.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior