கடலூர் :
மாவட்டத்தில் கான்கிரீட் வீடு திட்டத்திற்காக குடிசை வீடுகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடவுள்ள குழுவினர்களுக்கு ஒன்றியம் வாரியாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழக அரசு அறிவித்துள்ள கூரை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் வீட்டு வசதி திட்டத்திற்காக குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி துவங் கப்பட உள்ளது. இதற்காக அந் தந்த ஊராட்சிகளை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர், மக்கள் நலப்பணியாளர் மற்றும் ஊராட்சி உதவியாளர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுவினர் குடிசை வீடுகளை கணக்கெடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் பயிற்சி அளித்து வருகின்றனர்.
கடலூர்:
கோண்டூர் சமுதாய நலக்கூடத்தில் நடந்த முகாமில் 15 ஊராட்சிகளை சேர்ந்த குழுவினர்களுக்கு ஆர்.டி.ஓ., செல்வராஜ், பி.டி.ஓ.,க்கள் சீனிவாசன், மங்கலட்சுமியும், தூக்கணாம் பாக்கம் மற்றும் நடுவீரப்பட்டில் நடந்த முகாமில் பங்கேற்ற குழுவினர்களுக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) தர்மசிவம், கடலூர் பி.டி.ஓ., பத்மநாபன், தாசில்தார் தட்சிணாமூர்த்தி பயிற்சி அளித்தனர்.
கம்மாபுரம்:
ஒன்றிய அலுவலகத்தில் நடந்த முகாமில் பங்கேற்ற 14 ஊராட்சிகளை சேர்ந்த குழுவினர்களுக்கு நில எடுப்பு தாசில்தார் முகுந்தன், பி.டி.ஓ., நடராஜன் பயிற்சி அளித்தனர். சி.கீரனூரில் நடந்த முகாமில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார், பி.டி.ஓ.,க்கள் தமிழரசி, சுந்தர் பயிற்சி அளித்தனர்.
திட்டக்குடி:
இறையூரில் நடந்த முகாமில் பங்கேற்ற 17 ஊராட்சிகளை சேர்ந்த குழுவினர்களுக்கு விருத்தாசலம் ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன், நல்லூர் ஒன்றிய ஆணையர் சந்திரகாசன், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உதவி திட்ட மேலாளர் நாராயணன், உதவி ஆணையர்கள் வீரபாண்டியன், பிரேமா பயிற்சி அளித்தனர். நல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் செல்லபெருமாள், ஆணையர் ரவிசங்கர்நாத்தும், மங்களூர் ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர் ஜெகநாதன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சையத்ஜாபரும், சிறுபாக்கத்தில் திட்டக்குடி தாசில்தார் கண்ணன், உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரன், ஆணையர் புஷ்பராஜ் பயிற்சி அளித்தனர்.
புவனகிரி:
மஞ்சகொல்லையில் நடந்த முகாமில் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் பாலசுப்ரமணியன், பி.டி.ஓ.,க்கள் வாசுகி, திருமுருகனும், எறும்பூரில் நடந்த முகாமில் மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன், பி.டி.ஓ.,க்கள் ஜமுனா, நீலகண்டன் பயிற்சி அளித்தனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
தேத்தாம்பட்டில் நடந்த முகாமில் பங்கேற்ற 13 ஊராட்சிகளை சேர்ந்த குழுவினர்களுக்கு காட்டுமன்னார்கோயில் பி.டி.ஓ., விஜயன், சிதம்பரம் உதவி செயற்பொறியாளர் அருண்மொழி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக