விருத்தாசலம் :
கருவேப்பிலங்குறிச்சியில் மணல் குவாரி அமைக்க கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து கார்மாங்குடி உழவர் மன்ற தலைவர் வெங்கடேசன் கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியை சுற்றி 20 ம் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் மணல் குவாரி இல்லாததால் வீடு கட்டும் பணிக்கும், மற்ற பணிகளுக்கும் வெகு தூரம் உள்ள மணல் குவாரிகளுக்கே செல்ல வேண்டியுள்ளது. அதுவும் தங்கள் தேவைக்கேற்ப மணல் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு கருவேப்பிலங்குறிச்சியை மையமாக கொண்டு டயர் வண்டி மற்றும் டிப்பர்களுக்கான மணல் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக