விருத்தாசலம் ;
கார்குடல் தாய் சேய் நல விடுதி கட்டடம் பாழடைந்துள்ளதால் சிகிச்சை பெற இடமின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தில் பொதுமக்கள் நலன் கருதி தாய் சேய் நலவிடுதி அமைக் கப்பட்டது. இந்த தாய் சேய் நல விடுதி குடியிருப்பிலே செவிலியர் ஒருவர் தங்கி மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். கார்குடல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களான மாவிடந்தல், பொன்னேரி, சாத்தமங்கலம் உள்ளிட்ட கிராம மக்கள் இதில் சிகிச்சை பெற்று வந்தனர்.
நான்கு ஆண்டாக இந்த தாய்சேய் நல விடுதி கட்டடம் மற்றும் குடியிருப்பு கட்டடம் பாழடைந்து முட்புதர்கள் மண்டி பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் இங்கு தங்கி பணியாற்றிய செவிலியர் நகரத்தில் தங்கி தங்கியுள்ளார். தினமும் காலை கிராமத்திற்கு வரும் செவிலியர் பஸ் நிறுத்த நிழற்குடை, பள்ளி வளாகம் என பொது இடங்களில் மருத்துவ உதவிகள் செய்துவிட்டு பின்னர் மாலையில் தனது வீட்டிற்கு சென்று விடுகிறார்.
தாய்சேய் நல விடுதி இருந்தவரை கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை, பிரசவம் அங்கு நடந்து வந்தது. தற்போது இடம் இல்லாததால் அவர்களது வீட்டிலே பரிசோதனைகள், பிரசவம் நடந்து வருகிறது. இதனால் குழந்தை பெற்றுகொள் ளும் பெண்கள் வசதிகள் இன்றி சிரமமடைகின்றனர். மேலும் இரவில் செவிலியர் கிராமத்தில் தங்காததால் கர்பிணி பெண் கள் அவசர உதவிகள் பெற முடியாத நிலை உள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்கிடையே நகர மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியுள் ளது. பொதுமக்கள் நலன் கருதி கார் குடல் கிராமத்திற்கு புதிய தாய்சேய் நல விடுதி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக