உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 22, 2010

மாவட்டத்தில் தொடர் திருட்டை தடுக்க தீவிர முயற்சி : குற்றவாளிகள் விபரம் சேகரிக்கிறோம்: எஸ்.பி.,


கடலூர் : 

                தொடர் திருட்டு மற்றம் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோரை பல்வேறு கோணங்களில் தேடி வருவதாக எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறினார்.
 
இதுபற்றி எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறியதாவது: 

             சிதம்பரம் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆய்வு செய்த போது ஆதிவராகநல்லூரைச் சேர்ந்த அன் வர்பாஷா மனைவி ஷெரியா பேகம் மற்றும் அவரது மாமியார் மகபூப் பீவியும் சிதம்பரம் ஐ.சி. ஐ.சி.ஐ., வங்கியில் தலா ஒரு லட்சம் ரூபாயை மேனேஜர் அப்துல் ரகீமிடம் டெபாசிட் செய்து ஏமாற்றப் பட்ட வழக்கு பதிந்து நிலுவையில் இருந்தது.
 
               விசாரணையில் வங்கியில் பணம் பரிவர்த்தனை செய்தது உண்மை என தக்க ஆவணங்கள் மூலம் கண்டறியப்பட்டு அதன் பேரில் பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப் பட்டது. மும்பையில் தலைமை கணக்கு அலுவலர் மண்டல் என்பவரை தொடர்பு கொண்டு பாதிக் கப்பட்டவர்களுக்கு  தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுத்தேன். அதன் பேரில் வங்கி மூலம் முறைப்படி 2 லட்சம் ரூபாயை திரும்ப பெற்று அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தலைமறைவான வங்கி மேலாளர் அப்துல் ரகீமை தேடி வருகிறோம்.
 
                மாவட்டத்தில் சமீப காலமாக  வீட்டை உடைத்து நடக்கும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை ஆங் காங்கே செக்போஸ்ட் அமைத்து வாகன சோதனைகள் மூலம் தீவிரமாக தேடி வருகிறோம். மேலும் கடலூர், புதுச் சேரி மற்றும் திருச்சி மத் திய சிறைகளில் இருந்து கடந்த மூன்று மாதங்களில் வெளியே வந்த கைதிகள் மற்றும் 10 ஆண்டாக குற்றங்களில் ஈடுபடுவோர் விபரம் சேகரித்து அதன் அடிப்படையிலும் குற்றவாளிகளை தேடி வருகிறோம்.
தினமும் நான் மற்றும் அனைத்து டி.எஸ்.பி., க்கள், இன்ஸ்பெக்டர்கள் இரவு ரோந்து பணி மேற் கொள்கிறோம். விரைவில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம். பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது வெளியே விளக்குகளை எரிய விட்டு செல்ல வேண்டும். மேலும் போலீஸ் ஸ்டேஷன்களில் தகவல் தெரிவித்துவிட்டு சென்றால் குறிப்பிட்ட அப்பகுதியை கண்காணிக்க வசதியாக இருக்கும். இவ்வாறு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior