கடலூர் :
பொது வினியோகத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி, முழுபயனும் மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன், கடலூருக்கு வருகைத் தந்த பொது வினியோகத் திட்ட சட்ட புலனாய்வு குழு தலைவர் முன்னாள் நீதிபதி வாத்வா விடம் அளித்துள்ள மனு:
உணவுக்கான உரிமை அடிப்படை உரிமைகளின் ஒன்று என சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தில் அரசின் நோக் கங்கள் செயல்படுத்தி வந் தாலும், வரைமுறைகள் கடைபிடிக்காத நிலை உள்ளது. ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவு மற்றும் குடிமை பொருட்கள் முழுமையாக கிடைக்க உறுதி செய்ய வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் 22 லட்சம் மக்கள் தொகையில் 5 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் பொது வினியோக திட்ட பயன் கிடைப்பதில் பெரும் பலகீனம் உள்ளது. மாவட்டத் தில் உள்ள 1200 ரேஷன் கடைகளிலும், அனைத்து வேலை நாட்களிலும் அனைத்து பொருட்களும் கிடைப்பதில்லை. மூன் றில் ஒரு பங்கு உணவு பொருட்கள் கடத்தப்படுவதை தடுத்திட வேண் டும். வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிபடைத்திட கடைவாரியாக அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ குழு பிரதிநிதிகளை கொண்ட கண்காணிப்பு குழு நியமிக்க வேண்டும்.
அனைத்து வேலை நாட்களிலும் அனைத்து பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்தோதயா அன்ன யோஜனா திட்டத்தில் வறுமையில் வாழும் குடும்பங்களை அடையாளம் காண்பதில் நெறிமுறைப்படுத்த வேண்டும். உணவு பொருட்களை பாக்கெட்டுகளில் நிரப்பி வழங்க வேண்டும். கடலூர் மாவட்டத்திற்கு வந்திருந்த தங்கள் குழு பொதுமக்களின் பிரதிநிதிகளை சந்தித்து மனு அளிக்க வாய்ப்பு ஏற்படுத்தாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தை சீர்குலைக்கும் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக