உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 22, 2010

விஷ வண்டுகள் அழிப்பு

சிறுபாக்கம் :

                வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோர மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள் தாக்கி 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

                     சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அடுத்த புல்லூர் கைகாட்டி அருகில் நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான வயலில் 60 அடி உயரரத்தில் தென்னை மரம் உள்ளது. இதில் விஷ வண்டுகள் கூடு கட்டி வழியில் செல்வோரை கொட்டி அச்சுறுத்தி வந்தது. நேற்று காலை இவ்வழியாக சென்ற சிறுநெசலூர் பழனியம்மாள், வள்ளியம்மாள், வெங்கடாசலம், சுரேஷ், பாண்டியன் உட்பட புல்லூர், சிறுநெசலூர் கிராமங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோரை விஷ வண்டுகள் கொட்டியது. இவர்கள் அனைவரும் கழுதூர் மற்றும் வேப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றனர். வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில், கணேசன், பாலகிருஷ்ணன், செந்தில்குமார் உள்ளிட் டோர் விரைந்து சென்று மயக்க மருந்து தெளித்து விஷ வண்டுகளை அழித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior