திட்டக்குடி :
பெண்ணாடத்தில் தேசிய பெண்கல்வி சிறப்பு திட்டம் சார்பில் அறிவியல் கண்காட்சி மற் றும் கைவினை பொருட்களின் பொருட்காட்சி நடந்தது.
நல்லூர் ஒன்றிய எஸ். எஸ்.ஏ., சார்பில் தேசிய பெண் கல்வி சிறப்பு திட்ட மாதிரி தொகுப்பு மைய மாணவிகளுக்கு அறிவியல் கண்காட்சி மற்றும் கைவினை பொருட்களின் பொருட்காட்சி பெண்ணாடத்தில் நடந்தது. பெண்ணாடம் பேரூராட்சி சேர்மன் அமுதலட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் காதர், ஆசிரிய பயிற்றுனர்கள் ரவி, கிருஷ்ணமூர்த்தி, குணசேகரன், தமிழ் வேந்தன் முன்னிலை வகித்தனர். மேற்பார்வையாளர் சிவகாமசுந்தரி வரவேற்றார். நல்லூர் ஒன்றிய தி.மு.க., செயலாளர் பாவாடைகோவிந்தசாமி வாழ்த்தி பேசினார். அறிவியல் மற்றும் கைவினை பொருட்களின் கண்காட்சிகளை நல்லூர் ஒன்றிய சேர்மன் ஜெயசித்ரா துவக்கி வைத்தார்.
இதில் கொடிக்களம், கிளிமங்கலம், பாசிகுளம், கொசப்பள்ளம், பெண்ணாடம், திருவட்டத்துறை, கூடலூர் குடிகாடு, வடகரை, இறையூர், கூடலூர், பெ.பூவனூர் மாதிரி தொகுப்பு மையங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். சி.எஸ்.டி., திட்ட அலுவலர் டாக்டர் லெனின், ஒருங்கிணைப்பாளர்கள் சுமதி, விஜிஅனிகிரே, லதாமகேஸ்வரி, செல்வராஜ், அஞ்சலம், ராணி, கண்ணகி, சிவராமசேது பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் அமுதா நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக