உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 22, 2010

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தனிநபர் ஆதிக்கம்! உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதி


குறிஞ்சிப்பாடி : 

                குறிஞ்சிப்பாடி ஒழுங் குமுறை விற்பனை கூடத்தில் தனிநபர் ஆதிக்கத்தால் விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
 
            குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் உள்ள 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் நெல், மணிலா, உளுந்து, மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, தட்டைப்பயிர் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் விளை பொருட்களை குறிஞ்சிப்பாடியில் இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வந்து விற்று வருகின்றனர். இங்கு விற்பனைக்கு வரும் விளை பொருட் களை வாங்குவதற்காக கடலூர் மாவட்டம் மட்டுமன்றி வெளிமாவட்ட வியாபாரிகள் அதிக அள வில் வந்தனர். குறிப்பாக இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் மணிலா  ஏற்றுமதி தரத்தில் திடமாக இருப்பதால் மணிலா வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கியதால், விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைத்தது.
 
                   தற்போதும் இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு வியாபாரிகள் அதிக அளவில் வருகின்றனர். ஆனால் அந்த வியாபாரிகளை இப்பகுதியை சேர்ந்த தனிநபர் தடுத்து நிறுத்தி, கடலூர்- விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்பனையாகும் பொருள் களின் விலையை விட குறைவாக வாங்கித் தருவதாக ரகசிய ஒப்பந்தம் செய்து, இவர் ஒருவரே அனைத்து பொருள்களுக் கும் விலையை நிர்ணயம் செய்து வாங்கி வருகிறார். வியாபாரிகளும் தங்களுக்கு குறைந்த விலையில் பொருள்கள் கிடைப்பதால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு வராமல் அந்த தனிநபரின் உதவியுடன் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் விவசாயிகள், தாங்கள் கொண்டு வரும் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் அடைந்து வருகின்றனர். வியாபாரிகள் தாங்கள் கொள்முதல் செய்யும் விளை பொருட்களை,  விவசாயிகள் பெயரில் சிட்டா அடங்கல் கொடுத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூட குடோனில் இருப்பு வைத்துக் கொள்கின்றனர்.
இதனால் விவசாயிகள் கொண்டு வரும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நேரங்களில் இருப்பு வைக்க முடிவதில்லை. பொருட்களை மீண்டும் வீட்டிற்கு கொண்டு செல்ல முடியாமல் மிக குறைந்த விலைக்கு விற்க வேண் டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள் ளனர்.
 
         மேலும், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த பொருட்களுக்கு உடனடியாக பணம் தராமல், இரவு நேரங்களில் பணம் பட்டுவாடா செய் யப்படுகிறது. இரவு நேரத்தில் பணத்தை வாங் கும் விவசாயிகள் அவற்றை பாதுகாப்பாக வீட்டிற்கு எடுத்து செல்ல பெரும் சிரமத்திற்கு உள்ளாக வேண்டியுள்ளது. இப்பகுதி விவசாயிகள் பாடுபட்டு அறுவடை செய்யும் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைத்திட, ஒழுங்கு முறை விற்பனைக் கூடத் தில் நிலவி வரும் தனிநபர் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத் தில் கூடுதல் குடோன், விவசாயிகள் ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் முறைகேடுகளை தவிர்த் திட கண்காணிப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior