உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 03, 2010

வெள்ளியங்கால் ஓடை மதகில் ரூ.25 லட்சம் செலவில் 'ஜீப் டிராக்'

 சிதம்பரம் : 

                  வீராணம் ஏரி வெள்ளியங்கால் ஓடை மதகில், 25 லட்சம் ரூபாய் செலவில் வாகனங்கள் செல்வதற்கு, 'ஜீப் டிராக்' அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரியில் மழை, வெள்ளக் காலங்களில் வரும் உபரி நீர், ஏரியின் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் ஓடை வழியாக வெளியேற்றப்படும். அதற் காக மூன்று மதகுகள் உள்ளன. முதல் மதகு 6 ஷட்டருடன் பெரிய அளவிலும், அடுத் தடுத்த மதகுகள் முறையே 4 ஷட்டர்கள் உள்ளன. மழை, வெள்ளக் காலங் களில் மதகை திறப்பதற் கும், ஏரியின் கரையை பார் வையிடவும், மதகின் மேற் பகுதியில் மரக்கட்டையால் அமைக்கப்பட்டிருந்த நடைபாதை வழியாக நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. எனவே, அவசரத்திற்கு செல்ல முடியாத நிலை இருந்ததால், வாகனம் செல்லும் அள விற்கு, 'ஜீப் டிராக்' பாலம் அமைக்க பொதுப் பணித் துறை முடிவு செய்தது. புதிய வீராணம் திட்டத் தில் 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வெள்ளியங்கால் ஓடை மூன்று மதகிலும் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி இன்ஜினியர்கள் கலியமூர்த்தி, சரவணன் ஆகியோர் பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகின்றனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior