உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 03, 2010

போலி இருமல் மருந்து தயாரிப்பு: கடலூரில் மேலும் இருவர் கைது


கடலூர் : 

                   கடலூரில் போலி மருந்து விற்பனை தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறியதாவது

                   கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பிடாரியம்மன் கோவில் தெருவில் மருந்து மொத்த வியாபாரம் செய்து வரும் செல்வ விநாயகர் ஏஜன்சியை கடந்த 17ம் தேதி மருந்து கட்டுப் பாட்டு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

                  அதில், போலியாக தயார் செய்த, 'பெனட்ரில் சிரப்' (இரு மல் மருந்து) 2,700 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மருந்துகளை, தமிழகத் தின் பல்வேறு மருந்துக் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பியிருப்பது தெரிந்தது.கடலூர் மருந்துகள் சோதனை ஆய்வாளர் குருபாரதி கொடுத்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்தனர். இதையறிந்த வள்ளியப்பன், கடந்த 24ம் தேதி கடலூர் கோர்ட்டில் சரணடைந்தார். கோர்ட் அனுமதி பெற்று, வள்ளியப்பனை கடந்த 30ம் தேதி முதல் காவலில் வைத்து விசாரித்தனர். கடலூர் தங்கராஜ் நகரில் தங்கி, மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வரும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த கழனிவாசலைச் சேர்ந்த அழகர் மகன் முருகேசன்(31) என்பவர் தற்போது, 'பெனட்ரில்' இருமல் மருந்து மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகிறது. அதனால், 'பெனட் ரில்' போல் உள்ள விலை குறைந்த, 'அல்டெக்ஸ்' இருமல் மருந்தை வாங்கி அதன் லேபிளை கிழித்து விட்டு, 'பெனட்ரில்' லேபிளை ஒட்டி விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என வள்ளியப்பனிடம் கூறியுள்ளார்.

                  அதன்படி வள்ளியப்பன், அவரது நண்பர் புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் பழனிசாமி மகன் ஆனந்தன் (34) மற்றும் முருகேசனும் சேர்ந்து, 'பெனட்ரில்' மருந்தை போலியாக தயாரிக்க முடிவு செய்தனர். கடந்த ஜனவரியில், 16 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள, 'அல்டெக்ஸ்' மருந்து கம்பெனியிலிருந்து 50 ஆயிரம் பாட்டில்களை வாங்கி வந்து நெட்டப்பாக்கத்தில், 'அல்டெக்ஸ்' லேபிளை கிழித்து விட்டு, போலியாக அச்சடித்த, 'பெனட்ரில்' இருமல் மருந்து லேபிளை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கடலூர் அடுத்த சின்னபிள்ளையார்மேடு கிராமத்தில் இருந்து 252 பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த 22 ஆயிரத்து 809 போலி மருந்து பாட்டில்களையும், புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கத்தில் செங்கதிர் என்பவர் வீட்டு தோட்டத்தில் வைத்திருந்த 93 பெட்டிகளில் இருந்த 9,300 பாட்டில்களையும் பறிமுதல் செய்தோம்.

                   மேலும், போலி மருந்து தயாரிக்க வள்ளியப்பனுக்கு உடந்தையாக இருந்த மருந்து விற்பனை பிரதிநிதி முருகேசன் (31) ஆனந்தன் (34) ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து 10 ஆயிரம் போலி லேபிள்களை பறிமுதல் செய்துள்ளோம்.இவ்வாறு அஷ்வின் கோட்னீஸ் கூறினார். பாட்டிலுக்கு 3 ரூபாய் லாபம்: 'அல்டெக்ஸ்' இருமல் மருந்து (150 எம்.எல்.,) விலை 32.50 ரூபாய். ஆனால் இதே கொள்ளளவு கொண்ட, 'பெனட்ரில்' மருந்தின் விலை 57.50 ரூபாய். வள்ளியப்பன் கோஷ் டியினர், 'அல்டெக்ஸ்' மருந்தை மொத்தமாக வாங்கி லேபிளை மாற்றி ஒட்டி ஏஜன்சிகளுக்கு 47.50 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, அதில் 25 சதவீதம் தள்ளுபடியும் கொடுத்து 35.50 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இதை மருந்து கடைக்காரர்கள் 57 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்துள்ளனர். வள்ளியப்பன் கோஷ்டியினருக்கு ஒரு பாட்டிலுக்கு மூன்று ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.வித்தியாசம் என்ன?: ஒரிஜினல், 'பெனட்ரில்' சிரப்பில் 5 சதவீதம், 'ஆல்கஹால்' இருக் கும். இந்த பாட்டில் மூடியின் பக்கவாட்டில் தயாரிப்பு தேதி மற்றும் 'பேட்ஜ்' எண் குறிக்கப் பட்டிருக்கும். மேலும் கரும் சிகப்பு நிறத்திலும், லேபிள் பளபளப்பாகவும் இருக்கும். ஆனால் போலி, 'பெனட்ரில்' மருந்து பாட்டில் மூடியில் பெயர் எதுவும் இருக்காது. லேபிள் சற்று மங்கலாகவும், பாட்டில் வெளிர் சிகப்பு நிறத்திலும் இருக்கும்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior