சிதம்பரம் :
கடலூர் மாவட்டத்தில் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து, புலனாய்வு போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். மக்களுக்கு தொண்டு செய்யும் நோக்கத்துடன், தமிழகத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியைத் தொடர்ந்து, தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது. அவைகளில் சில தொண்டு நிறுவனங்கள், சேவை என்ற பெயரில் வருமானம் ஒன்றே குறிக்கோளாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தஞ்சாவூரில், மணிப்பூர் குழந்தைகள் 32 பேரை அனாதை என்ற பெயரில் அடைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதே போன்று சில மடங்களும் செயல்பட்டதும் சமீபத்தில் பிரச்னை எழுந்துள்ளதால், இதுபோன்ற மோசடி தொண்டு நிறுவனங்களை கண்டுபிடிக்க, அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக, தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் இயங்கி வரும் தொண்டு நிறுவனங்கள் முறைப்படி பதிவு செய்யப்பட்டவையா? நிதி ஆதாரங்கள் என்ன? எந்தெந்த வகையான சேவைப் பணியில் ஈடுபடுகின்றன? முறைப்படி அரசிடம் கணக்குகள் சமர்ப்பிக்கப்படுகிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு வகையான விவரங்கள், புலனாய்வு போலீசார் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
downlaod this page as pdf