பண்ருட்டி :
பண்ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டு ஊராட்சியில் 'டிவி' ஒப்படைக்கும் போராட்டத்தை தொடர்ந்து சமாதான கூட்டம் நடந்தது. பண்ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டு ஊராட்சி பொதுமக்கள் கடந்த டிசம்பர் மாதம் இலவச 'டிவி' கேட்டு மறியல் செய்த 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை கண்டித்து நேற்று முன்தினம் அண்ணாகிராம ஒன்றிய அலுவலகம் முன் இலவச கலர் 'டிவி'யை ஒப்படைக் கும் போராட்டம் நடந்தது. அப்போது இலவச 'டிவி' க்கள் உடைக் கப்பட்டதால் 45 பேர் கைது செய்து விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க நேற்று பண்ருட்டி தாலுக்கா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., செல்வராஜ் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. தாசில்தார் பாபு, டி.எஸ்.பி., பிரசன்னகுமார், கீழ்கவரப்பட்டு ம.தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் ஜெய்சங்கர், இந்திய கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் சிவக்குமார், ரவீந்திரன், ஆசை தாமஸ், சச்சிதானந்தம் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருவேங்கடம், செல்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மறியல் வழக்கு வாபஸ் பெறுவது குறித்து டி.எஸ்.பி., பரிசீலனை செய்து முடிவு செய்வதெனவும், இனிமேல் பொதுமக்களுக்கு இடையூறாக சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க ஒத்துழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
downlaod this page as pdf