உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 03, 2010

தூர்ந்துபோன கழிவுநீர் கால்வாய் சுகாதாரமற்ற சூழலில் அரசு அலுவலகங்கள்

 பண்ருட்டி:

                    ரசு அலுவலகங்கள் நிறைந்துள்ள பகுதியில் செல்லும் பிரதான கால்வாய் தூர்ந்து போய் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளதால்,​​ அரசு அலுவலர்களும்,​​ பொது மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பண்ருட்டி நகரின் மையப் பகுதியான நான்கு முனை சந்திப்பு அருகே பத்திரப்பதிவுத் துறை,​​ பொதுப்பணித் துறை,​​ காவல் நிலையம்,​​ கருவூலகம்,​​ கிளைச் ​ சிறை ​(ஃபார்ஸ்டர் பள்ளி)​ காந்தி பூங்கா உள்ளிட்டவை அமைந்துள்ளன.​ மேற்கண்ட அரசு அலுவலகங்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் செல்லும் கழிவுநீர் கால்வாய் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி தூர்ந்து போய் உள்ளது.​ மேலும் கருவூலகத்துக்கும்,​​ கிளைச் சிறைக்கும் இடைப்பட்ட பகுதியில் இயற்கை உபாதைகள் கழிக்கப்படுகின்றன.​ தேங்கி நிற்கும் கழிவுநீரில் தூர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரப்பும் கிருமிகள் உற்பத்தியாகின்றன.​ இதனால் மேற்கண்ட அலுவலகங்களில் பணியாற்றுபவர்களும்,​​ அங்கு வரும் பொது மக்களும் பகல் நேரத்திலேயே கொசுக் கடிக்கு ஆளாகின்றனர். 

                         பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள இந்த கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்து கொடுக்க வேண்டும் என நகர நிர்வாகத்திடம் முறையிட்டும் பலனில்லை என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறினர். இப்பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் கழிவுநீர் கால்வாயை காலமுறைப்படி சுத்தம் செய்து மருத்து தெளித்து சுகாதாரமான சூழ்நிலையை நகர நிர்வாகம் செய்து தரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior