உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 03, 2010

எள் சாகுபடியில் அதிக மகசூல் பெற

 கடலூர்:

                  எள் சாகுபடியில் அதிக மகசூல் பெற புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் என்று வேளாண் துறை அறிவித்து உள்ளது.

வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன் இதுகுறித்து புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:​ ​

                        தமிழ்நாட்டில் 1.16 லட்சம் ஹெக்டேரிலும்,​​ கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஹெக்டேரிலும் எள் சாகுபடி செய்யப்படுகிறது.​ எள் சாகுபடி செய்யும் விவசாயிகள் தொழில் நுட்பங்களைச் சரியாகக் கடைபிடிப்பது இல்லை.​ இதனால் சராசரி மகசூல் குறைகிறது.​ சரியான தொழில் நுட்பங்களை முறையாகக் கடைபிடித்தால்,​​ ஹெக்டேருக்கு சராசரி 2 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும்.​ ​பாசன வசதி உள்ள பகுதிகளில் சித்திரைப் பட்டத்தில் எள் சாகுபடி செய்யலாம்.​ சித்திரைப் பட்டத்துக்கு டிஎம்வி-3,4 கோ-1,​ விஆர்ஐ-1 மற்றும் எஸ்விபிஆர்-1 ஆகிய ரகங்கள் ஏற்றவை.​ அனைத்து ரகங்களும் ஒரு ஏக்கர் விதைப்புக்கு 2 கிலோ விதை போதும்.​ 2 கிலோ விதையுடன் 8 கிலோ மணல் கலந்து வயலில் சீராகத் தூவவேண்டும். விதை மற்றும் மண் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதை நேர்த்தி அவசியம்.​ ஒரு கிலோ விதையுடன் டிரைகோடெர்மா விரிடி பூஞ்சாணத்தை 4 கிராம் கலந்து விதைக்க வேண்டும்.​ விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.​ இதை 30 நாள்கள் வரை வைத்திருந்து விதைக்கலாம்.​ ​

                         பயிர்களுக்கு இயற்கையாகவே தழைச்சத்து கிடைக்க நுண்ணுயிர் நேர்த்தி செய்யவேண்டும்.​ இதற்கு ஒரு ஏக்கருக்கு அசோஸ்பைரிலம் ஒரு பாக்கெட் ​(200 கிராம்)​ பாஸ்போ பாக்டீரியா 200 கிராம் ஆகியவற்றை 500 மில்லி ஆடைநீக்கிய ஆறிய கஞ்சியுடன் கலந்து 2 கிலோ விதையுடன் சேர்த்து கலக்க வேண்டும்.​ இதை நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.​ இதை விதைப்பதற்கு 30 நிமிடம் முன் செய்ய ​ வேண்டும்.​ மேலும் 20 கிலோ தொழு உரத்துடன் ஏக்கருக்கு 4 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா மற்றும் 4 பாக்கெட் அúஸôஸ்பைரில்லம் கலந்து கடைசி உழவின்போது தூவ வேண்டும். இறவை எள் பயிருக்கு மண் பரிசோதனை சிபாரிசுப்படி உரமிட வேண்டும்.​ அல்லது துறை சிபாரிசுப்படி,​​ ஒரு ஏக்கருக்கு 14:9:9 கிலோ என்ற விகிதத்தில் தழை,​​ மணி,​​ சாம்பல் சத்துக்களை தரவல்ல யூரியா 30 கிலோ,​​ சூப்பர் பாஸ்பேட் 55 கிலோ,​​ பொட்டாஷ் 15 கிலோ அளவில் உரமிட வேண்டும்.​ அúஸôஸ்பைரிலம் 4 பாக்கெட் கலந்தால் யூரியா 27 கிலோ போதும்.​ மாங்கனீஸ் சல்பேட் நுண்ணூட்டச்சத்து 2 கிலோவை 20 கிலோ மணலுடன் கலந்து விதைத்தபின் வயலில் தூவவேண்டும்.​ ​எள் பயிரில் பயிர் கலைத்தல் செய்யாவிட்டால் மகசூல் பாதிக்கும்.​ பயிர் கலைப்பு செய்திட விதைத்த 15-வது நாளில் செடிக்குச் செடி 15 செ.மீ.​ இடைவெளி இருக்கும்படியும்,​​ 30-வது நாளில் செடிக்குச் செடி 30 செ.மீ.​ இடைவெளி உள்ளவாறும் வைத்து,​​ மற்ற செடிகளைப் பிடுங்கி விட வேண்டும்.​ செடிகளைக் கலைத்து விடும்போது வயலில் போதிய அளவு ஈரம் இருப்பது நல்லது.​ சித்திரைப் பட்டத்தில் மேற்படி சாகுபடி தொழில் நுட்பங்களைக் கடைபிடித்து கூடுதல் மகசூல் பெறலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior