உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 03, 2010

பெயரளவுக்கே இயங்கும் சிதம்பரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்

 சிதம்பரம்:

                      ஆண்டுகளாக சிதம்பரத்தில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் உரிய வசதிகளின்றி பெயரளவிற்கே செயல்பட்டு வருகிறது.​ இதனால் விவசாயிகளும்,​​ வணிகர்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சிதம்பரம் அண்ணா கலையரங்கம் வளாகத்தில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் சிறிய பகுதியில் பெயரளவுக்கு செயல்பட்டு வருகிறது.​ 7-2-1963-ல் சிதம்பரம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் தொடங்கப்பட்டது. இதுவரை சொந்த இடம் வாங்கி விற்பனைக் கூடம் அமைக்கப்படவில்லை.​ நகராட்சிக்குச் சொந்தமான அண்ணா கலையரங்கம் பகுதியில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.இந்த விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைப் பொருள்களை விவசாயிகள் கூடத்துக்குள் கொண்டு வந்து விற்கவோ,​​ வணிகர்கள் வாங்கவோ எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

                        இன்று வரை எந்த வணிகமும் சிதம்பரம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்குள் நடைபெறவில்லை .9.8.2000-ல் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு ரூ.11 லட்சம் செலவில் பொருளீட்டுக் கடன் கிடங்கு மற்றும் ரூ.2.75 லட்சம் செலவில் உலர்களம் அமைக்க வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தால் அடிக்கல் நாட்டப்பட்டு இன்று வரை கிடங்கு மற்றும் உலர்களம் அமைக்கப்படவில்லை.""விற்பனைக் கூடத்துக்கு வெளியே நடந்த வணிகத்துக்கு மட்டும் வணிகர்களுக்கு எந்தவித சேவையும் செய்யாமல் விற்பனைக் கட்டணம் மட்டும் வசூல் செய்து விவசாயிகளுக்கும்,​​ வணிகர்களுக்கும் எந்தவித நிரந்திர தேவையான வசதிகளும் செய்யப்படவில்லை. வசூலித்த கட்டணத் தொகையை இயங்காத உழவர் சந்தை அமைக்கவும்,​​ அதன் நிர்வாக செலவுகளுக்கும் மற்றும் பிற விற்பனைக் கூடங்களின் வளர்ச்சிக்கு செலவு செய்யப்பட்டுள்ளது'' என சிதம்பரத்தைச் சேர்ந்த வணிகர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.""ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு குறைந்தது 5 ஏக்கர் இடத்தில் நிரந்தர விற்பனைக் கூடம் அமைக்கப் பெற்றால்தான் இந்த பகுதியில் விளையும் விளைப் பொருள்களை விற்பனைக் கூடத்துக்குள்ளே கொண்டு வந்து வணிகம் நடைபெற வழி பிறக்கும்.ஆனால் தற்போது விற்பனைக் கூடத்துக்கு ஒரு சிறிய இடத்தில் ஏதோ ஒரு ஏலக் கொட்டகை மட்டும் போட்டு விற்பனை நடத்துவது பெயரளவுக்கே செயல்படுவதே ஆகும். 

                    உரிய தேவையான வசதிகளின்றி சொந்த இடங்களில் பெயரளவுக்கு இயங்கும் தமிழகத்தில் உள்ள சுமார் 150 விற்பனைக் கூடங்களோடும் சிதம்பரம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடமும் சேர்ந்து கொள்ளும் நிலை உள்ளது'' என உழவர் கூட்டமைப்பு தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தார்.சிதம்பரம் நகரில் பொதுக் கூட்டங்கள்,​​ சர்க்கஸ் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்துவதற்காக இருந்த அண்ணா கலையரங்கம் என்ற ஒரு இடம் மட்டுமே உள்ளது.அந்த கலையரங்கத்தில் செயல்படாத ஒழுங்கு முறை விற்பனைக் கூடம்,​​ உழவர் சந்தை மூலம் அண்ணா பெயரில் இயங்கி வரும் கலையரங்கத்தை அண்ணா நூற்றாண்டில் நிரந்தரமாக மூடிய பெருமை வேளாண்துறையைதான் சாரும்.எனவே வேளாண் துறையினர் போதிய இடவசதியுடன் வேறு இடத்தில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் அமைத்து உரிய நிரந்தர வசதிகளுடன் செயல்படவும்,​​ அறிஞர் அண்ணா கலையரங்கம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் தமிழக முதல்வர் மற்றும் வேளாண்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிதம்பரம் வர்த்தக சங்கத் தலைவர் இராம.ஆதிமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior