பெங்களூரு :
முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் மூலம், ஜி.எஸ்.எல்.வி., டி-3 ராக்கெட்டை விண்ணில் செலுத்த, 'இஸ்ரோ' திட்டமிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
ராக்கெட்டை செலுத்துவதற்கான இன்ஜின் தொழில்நுட்பம், இதுவரை வேறு சில நாடுகளிடம் இருந்து வாங்கி, பயன்படுத்தப்பட்டது. 1992ல் இந்த தொழில்நுட்பத்தை ரஷ்யாவிடம் இருந்து பெற திட்டமிட்டோம். ஆனால், அதற்கு அமெரிக்கா தடை விதித்தது. இதனால், இன்ஜின் தொழில்நுட்பத்தை இந்தியாவிலேயே வடிவமைக்க முயற்சிகள் மேற்கொண்டோம். அந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது. முற்றிலும், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் மூலம், ஜி.எஸ்.எல்.வி., டி-3 ராக்கெட், விரைவில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.இதற்கான இறுதிக் கட்ட பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. வரும் 15ம் தேதியில் இருந்து, எந்த நேரத்திலும் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படலாம்.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.
downlaod this page as pdf