சிதம்பரம் :
சிதம்பரத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி., குருப் 1 தேர்வில், 1,827 பேர் தேர்வு எழுதினர்.
டி.என்.பி.எஸ்.சி., குருப் 1 தேர்வு கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று நடந்தது. அரசு நந்தனார் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி, ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி, ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளி, பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, சி.முட்லூர் அரசு கலைக் கல் லூரி ஆகிய ஏழு மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 2,472 பேருக்கு ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டது. ஆனால் 645 பேர் தேர்வு எழுத வராததால் 1,827 பேர் மட்டும் எழுதினர். தேர்வு மையங்களை டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையக் குழு உறுப்பினர் ராமசாமி, டி.ஆர்.ஓ., நடராஜன் ஆகியோர் பார்வையிட்டனர். ஆர்.டி.ஒ., ராமராஜ், தாசில்தார் காமராஜ் அனைத்து மையங்களையும் கண்காணித்தனர். அத்துடன் 10 முதன்மை மேற்பார்வையாளர்கள், 10 ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். டி.எஸ்.பி., மூவேந்தன் மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக