உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 03, 2010

கோடை மழை பொழிவு காய்கறி பயிர்கள் பாதிப்பு


கடலூர் : 

              கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த கோடை மழை காரணமாக காய்கறி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

           கோடை வெயில் சுட்டெரிக்கும் வேளையில் திடீரென கோடை மழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில் சராசரியாக 30 மி.மீ., மழை பெய் தது. கடலூரில் 36 மி.மீ., ராமநத்தத்தில் 80 மி.மீ., மழையும் பெய்தது. இந்த மழை விவசாயிகள், பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் சில காய்கறி பயிர்கள் மழையால் சேதமடைந்துள்ளதால் சில விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கடலூர் சுற்றியுள்ள உச்சிமேடு, நாணமேடு, கண்டக்காடு கிராமங்களில் காய்கறி பயிர்கள் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கத்தரிக்காய், வெங்காயம், சுரை, மலர் செடிகள் இந்த மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior