கடலூர் :
விழுப்புரம் - மயிலாடுதுறை அகலப் பாதையில் இயக்கப்படும் அனைத்து விரைவு ரயில்களும் திருப் பாதிரிப்புலியூரில் நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னாள் சட்டசபை மேலவை உறுப்பினர் ஜெயச்சந்திரன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம் - மயிலாடுதுறை அகலப்பாதை பணிகளை முடித்து பாசஞ்சர் மற்றும் திருச்சி, நாகூர் விரைவு ரயில் இயக்கி வருவதை வரவேற்கிறோம். முன்பு மீட்டர் கேஜாக இருந்தபோது அனைத்து விரைவு ரயில்களும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மற்றும் கடலூர் முதுநகர் ஜங்ஷனிலும் நின்று சென்றன.
ஆனால் தற்போது அகலப்பாதையாக மாற்றிய பின்னர் திருச்சி - சென்னை விரைவு ரயில் கடலூர் முதுநகரில் மட்டுமே நிற்கிறது. மாவட்டத்தின் தலைநகரான கடலூரின் மையப் பகுதியில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனில் நிற்காமல் செல்வது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. அதேபோன்று விரைவில் புவனேஸ்வர் - ராமேஸ்வரம் விரைவு ரயில் இயக்கப்படவுள்ளதை வரவேற்கிறோம். ஆனால் ரயில்வே அட்டவணையில் இந்த ரயில் திருப்பாதிரிப்புலியூர், கடலூர் முதுநகர் மற்றும் சிதம்பரம் பகுதிகளில் நிறுத்தவதற்கான நேரம் குறிப்பிடப்படவில்லை. விரைவு ரயில் நிறுத்தவில்லை எனில் கடலூர் மாவட்டத்திற்கே மிகப் பெரிய அவப் பெயராகும். ஆன்மீக ஸ்தலங்களை இணைக்கும் இந்த ரயில் அவசியம் மேற்கண்ட மூன்று ஊர்களிலும் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக