உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 03, 2010

டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த கலெக்டருக்கு பொதுமக்கள் மனு


சேத்தியாத்தோப்பு : 

             ஓடாக்கநல்லூரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்டாக் கடையை ஒதுக்குப்புறமான இடத்திற்கு மாற்ற கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஓடாக்கநல்லூர் கிராம மக்கள் சார்பில் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: 

                 கீரப்பாளையம் ஒன்றியம் ஓடாக்கநல்லூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. பஸ் ஸ்டாப் அருகிலும், மக்கள் நடமாட்டம் உள்ள மெயின் ரோட்டில் கடை அமைந்துள்ளது. குடிகாரர்கள் குடித்துவிட்டு கும்மாளம் போடுவதாலும், ஆபாசமாக பேசுவதாலும் ரோட்டில் நடக்ககூட மக்கள் அச்சப்படுகின்றனர். மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி சென்று திரும்பும் மாணவிகளும், வேலைக்கு சென்று திரும்பும் ஆண்களும், பெண்களும் அவதிப்படுகின்றனர். இதே இடத்தில் டாஸ்மாக் இருந்தால் இனக் கலவரம் உருவாகவும் வாய்ப்பு உள்ளது. எனவே மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ள டாஸ்மாக்கை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior