திட்டக்குடி :
திட்டக்குடியில் குடிபோதையில் போலீஸ்காரரை கொலை செய்ய முயன்ற வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மூன்று பேரை தேடி வருகின்றனர்.
திட்டக்குடி மேலவீதியைச் சேர்ந்தவர் ஆனந்த் என்ற முருகானந்தம்; பெரம்பலூர் மாவட்டத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு சாப்பிடுவதற்காக மெயின் ரோட்டில் உள்ள ஓட்டலுக்கு வந்தார். அப்போது அந்த ஓட்டலில் குடிபோதையில் வந்த ஆறு பேர், சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் வந்த இண்டிகா காரை அரியலூர் - திட் டக்குடி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தியிருந்தனர். அப் போது அவ்வழியாக வந்த அரசு பஸ்சுக்கு வழி விடுமாறு போலீஸ்காரர் முருகானந்தம் கூறினார்.
ஆத்திரமடைந்த ஆறு பேரும் முருகானந்தத்திடம் தகராறு செய்து தாக்கினர். காரிலிருந்து வீச்சரிவாளை எடுத்து கொலை வெறியுடன் வெட்ட முயன்றனர். முருகானந்தத்தின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திரண்டனர். கும்பலை பார்த்ததும் ரவுடிகள் தப்பியோட முயன்றனர். அதில் மூன்று பேரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். மற்ற மூன்று பேரும் காரில் தப்பிச் சென்றனர். டி.எஸ்.பி., இளங்கோ, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். தொழுதூர் புதிய காலனியைச் சேர்ந்த பாக்கியராஜ்(28), பிரபா என்ற பிரபாகரன்(24) லக்கூர் காலனி கார்த்தி என்ற கார்த்திகேயன் (23) என தெரிந்தது. போலீஸ்காரர் முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில் பாக்கியராஜ், பிரபாகரன், கார்த்திகேயன் ஆகியோர் கைது செய்யப் பட்டனர். மேலும் தலைமறைவான பெரம்பலூர் மாவட்டம் ஆடுதுறை விமல் என்ற விமல்ராஜ், பென்னகோணம் வாசு, முருகன் ஆகியோரை தேடி வருகின்றனர். காருக்குள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்ததால் கூலிப்படையைச் சேர்ந்தவர்களா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக