கடலூர் :
முப்பது ஆண்டுகளானாலும் தி.மு.க., ஆட்சியில் பாதாள சாக்கடை பணி முடியாது என முன்னாள் அமைச்சர் கலைமணி பேசினார். அ.தி.மு.க., அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் கடலூர் புதுப்பாளையத் தில் நடந்தது. மாவட்ட செயலாளர் பாலகிருஷ் ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் குமரன் வரவேற்றார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கலைமணி பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின் வெட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள் ளது. இதனை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக் கையும் எடுக்க வில்லை. ஜெ., ஆட்சியில் 10 ஆயிரம் மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி, தற் போதைய ஆட்சியில் 7 ஆயிரம் மெகாவாட்டாக குறைந்துள்ளது. போதிய பராமரிப்பு இல்லாததாலேயே மின் உற்பத்தி குறைந்துள்ளது. கடலூர் நகரில் பாதாள சாக்கடை திட்டம் இதுவரை முடிக்கப்படாமல் உள்ளது. இன்னும் 30 ஆண்டுகளானாலும் பாதாள சாக்கடை பணி முடிவடையாது. கூட்டத்தில் மண்ணாடி கிருஷ்ணமூர்த்தி, அரங்கநாதன், மாவட்ட செயலாளர் சம்பத், முன்னாள் மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர்.,மன்ற செயலாளர் சுப்ரமணியன், விவசாய பிரிவு காசிநாதன், அண்ணா தொழிற் சங்க துணை செயலாளர் ஆறுமுகம், வக்கீல் பிரிவு பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக