உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 03, 2010

என்எல்சி அனல்மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர் கைது

 நெய்வேலி:

               நெய்வேலியில் என்எல்சி 2-ம் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை செய்யும் செல்வக்குமார் என்பவரை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். என்எல்சி 2-ம் அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிகள் நெய்வேலியில் தற்போது முழுவீச்சில் நடைபெறுகிறது. இங்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. எடாக் எனும் தனியார் நிறுவனமும் இங்கு ஒப்பந்தப் பணி மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

               இவர்கள் அனைவரும் தென் மாவட்டங்களில் இருந்து வந்திருப்பதால், இவர்கள் தங்குவதற்காக எடாக் நிறுவனத்துக்கு என்எல்சி நிர்வாகம் வட்டம் 5-ல் குடியிருப்புகளை வழங்கியிருந்தது. இந்தக் குடியிருப்பில் வசித்த ஒப்பந்தத் தொழிலாளர்களில் சிலர் அருகாமையில் வசிக்கும் குடும்பப் பெண்களிடம் அருவறுக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவது, ஆபாச படங்களை வரைந்து அவர்களை கிண்டல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் வசித்துவரும் சுப்பிரமணி என்ற ஒப்பந்ததாரர் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இப்புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சேகர் உத்தரவின் பேரில், எஸ்.ஐ. ரேவதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் மேற்பார்வையாளர் செல்வக்குமார் என்பவர் போலீசாரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவுசெய்த போலீசார், அவரைக் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior