பண்ருட்டி :
கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டு மே 1ம் தேதி முதல் பண்ருட்டி உழவர் சந்தை செயல்படும் என கூறியும் அதிகாரிகள் மெத்தனத்தால் இன்னும் செயல்பட துவங்கவில்லை.
பண்ருட்டி உழவர்சந்தை செயல்படுத்துவது குறித்து கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் கடந்த மாதம் 23ம் தேதி அனைத்து துறை, காய்கறி வியாபாரிகளுடன் ஆர்.டி.ஒ., செல்வராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டத்தில் மே 1ம் தேதி முதல் உழவர் சந்தை செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் 1ம் தேதி முதல் உழவர் சந்தை செயல்படவில்லை. எப்போதும் போல் வெறிச்சோடியது. அன்று காலை சென்னை சாலையில் வியாபாரம் செய்த காய்கறி கமிஷன் வியாபாரிகளை வேளாண் துணை இயக்குனர் தனவேல் தலைமையில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டனர். விவசாயிகளை கேட்டால் உழவர் சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் எப்படி வியாபாரம் செய்ய முடியும் என கூறுகின்றனர். அதிகாரிகளோ உழவர் சந்தை நடந்ததாக கணக்கு காட்டுகின்றனர்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக