உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 03, 2010

கோவில்களுக்கு வர வேண்டிய வருவாய் இழப்பு! நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம்


கடலூர் : 

                 கோவில் சொத்துக்களுக்கான வாடகை மற் றும் குத்தகை வசூலிப்பதில் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் போதிய ஆர்வம் காட்டாததால் அரசுக்கு வர வேண் டிய வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

                ஆன்மிகத்தை வளர்க்கும் பொருட்டு மன்னர் காலத்தில் கலை நயமிக்க கோவில்கள் பல கட்டப்பட்டுள்ளன. இந்த கோவில்களை பராமரிக்கவும், தினசரி பூஜை செய்யவும், ஆண்டிற்கு ஒருமுறை திருவிழா நடத்தும் பொருட்டு நிலம், வீடு போன்ற சொத்துக்களை எழுதி வைத்துள்ளனர். சுதந்திரத்திற்கு பின் தமிழகத்தில் உள்ள கோவில்கள் இந்து அறநிலையத் துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டிற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் வருவாய் வரும் கோவில்கள் பட்டியலை சாராதவை என்றும், இவை இந்து அறநிலையத்துறை துணை ஆணையரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டிற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருவாய் வரும் கோவில் கள் பட்டியலை சார்ந்தவை என்றும், இந்த கோவில்கள் அறநிலையத் துறையின் இணை ஆணையரால் பராமரிக் கப்பட்டு வருகிறது.

                 ஆன்மிகத்திற்கு பெயர் பெற்ற கடலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட கோவில்கள் பட்டியலை சாராதவை இனத்திலும், சிதம்பரம் நடராஜர் கோவில், கடலூர் பாடலீஸ்வரர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி, ஆஞ்சநேயர், வரதராஜ பெருமாள், விருத்தகிரீஸ்வரர், வீரட்டானேஸ்வரர், சரநாராயணபெருமாள், திருமூல நாதர், பூவராக சுவாமி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த மற்றும் பாடல் பெற்ற கோவில்கள் பட்டியல் இனத்தில் உள்ளன. பட்டியலைச் சார்ந்த இந்த கோவில்களுக்கு நிலம், வீடு, கடைகள் மற் றும் வர்த்தக வளாகங்கள் என ஏராளமான சொத்துக் கள் உள்ளன. இந்த சொத் துக்களை தனி நபர்களுக்கு குத்தகை மற்றும் வாடகைக்கு விட்டு அதில் வரும் வருவாயைக் கொண்டு கோவிலை பராமரித்து வர வேண்டும். கோவில் சொத்துக் களை குத்தகைக்கும் மற் றும் வாடகைக்கு எடுத்தவர்கள் கோவிலுக்கு செலுத்த வேண்டிய தொகையை பல ஆண்டுகளாக செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். கோவில் நிலங்களை பல ஆண்டாக குத்தகைக்கு வைத்திருப்பவர்கள் குறிப் பிட்ட காலத்திற்கு பிறகு வேறு நபர்களுக்கு 'பகடிக்கு' (பத்திர பதிவு இன்றி விலை பேசி விற்று விடுவது) விட்டு விடுகின்றனர்.

                 பகடிக்கு எடுத்தவர்கள் ஏற்கனவே குத்தகை எடுத்தவர் பெயரிலேயே கோவிலுக்கு பணத்தை செலுத்தி வருகின்றனர். அதேபோன்று கோவிலுக்கு சொந்தமான வணிக வளாகங்களில் உள்ள கடைகளை குத்தகை எடுத் தவர்கள், கூடுதல் தொகை பெற்றுக் கொண்டு வேறு நபர்களுக்கு கடையை வாடகைக்கு விடுகின் றனர். சிலர் ஒரே கடையை இரண்டு அல்லது மூன்றாக பிரித்து உள் வாடகைக்கு விட்டு கூடுதல் வருவாய் ஈட்டி வருகின்றனர். பலர் கோவில் இடங்களை குத்தகைக்கு எடுத்து கூடுதல் தொகைக்கு வாடகைக்கு விடுவதையே தொழிலாக கொண்டுள்ளனர். இவ்வாறு கோவில் இடங்களை வாடகைக்கு விடுபவர்கள் வாடகைதாரரிடம் மாதந்தோறும் வாடகையை வசூலித்த போதிலும், கோவிலுக்கு செலுத்த வேண்டிய மிகச் சொற்ப தொகையையும் செலுத்துவதில்லை. அல் லது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விடுகின்றனர். இதனால் பல கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ள கோவில்கள் பல போதிய வருவாய் இன்றி நிர்வாக செலவினங்களுக்கே அரசின் நிதி ஒதுக்கீட்டை எதிர் பார்க்க வேண்டியுள்ளது.

               கோவில் சொத்துக் களை வைத்து தனி நபர்கள் வியாபாரம் செய்வதை தடுக்க வேண்டிய இந்து அறநிலையத்துறை அதிகாரிகளோ, ஊழியர்கள் பற் றாக்குறை காரணமாக வாடகை வந்தால் போதும் என எதையும் கண்டு கொள்ளாமல் உள் ளனர். கோவில் சொத்துக் களை வைத்து நடைபெறும் இந்த முறைகேடுகளை தடுத்திட கோவில் நிலம், வீடு, கடை மற்றும் வணிக வளாகங்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை பொது ஏலம் விட வேண்டும். இதன் மூலம் குத்தகை தொகையும் அதிகரிக்கும். கோவிலுக்கு வருவாயும் பெருகும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆன் மிகவாதிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior