உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 03, 2010

மணல் திருட்டில் மயானம் காணாமல் போனதால் போராட்டம்


கடலூர் : 

                       கடலூர் கூத்தப்பாக்கத்தில் இறந்தவர் உடலை புதைக்க இடம் இல்லாததால் தவித்த பொதுமக்கள் பாடையில் படுத்து போராட்டம் நடத்தினர்.

                      கூத்தப்பாக்கம் பாரதியார் நகரைச் சேர்ந்த சுப்ரமணியன் உடல் நிலை சரியில்லாமல் இறந்ததால் நேற்று மாலை அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர் மற்றும் நண்பர்கள் கம்மியம்பேட்டை அருகே உள்ள கெடிலம் ஆற்றங்கரைக்குச் சென்றனர். பிரேதங்களை வழக்கமாக எடுத்துச் செல்லும் வழி பட்டா இடம் என்பதால் தற்போது அந்த இடம் பிளாட் போடப்பட்டு வழி அடைக்கப்பட்டிருந்தது. மேலும் டிப்பர் லாரி மற்றும் மாட்டு வண்டிகளில் திருட்டுத் தனமாக மணல் அள்ளியதால் மயானத்திற்கு செல்லும் வழியும் மயானமும் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

                     வெகுநேரம் பிரேதத்தை வைத்துக் கொண்டு தவித்தவர்கள் பாடையிலிருந்து பிரேதத்தை தனியாக தூக்கிக் கொண்டு பள்ளத்தில் இறங்கியும் ஆற்று தண்ணீரில் நடந்தும் சென்று மீதமிருந்த இடத்தில் பிரேதத்தை ஒரு வழியாக அடக்கம் செய்தனர். கூத்தப்பாக்கம் பகுதி பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் இறந்தால் புதைக்கும் இடங்களில் மணல் திருட்டால் மயான இடமே காணாமல் போனதால் ஆத்திரமடைந்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திடீரென அவர்கள் கொண்டு வந்த பாடையிலேயே படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் கூத்தப் பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior