கடலூர் மாவட்டத்தில் சாலை வரி செலுத்தாமல் இயக்கப்படும் வாகனங்களை சோதனையிடும் கடலூர் புதுநகர் போலீசார்
சிதம்பரம்:
சிதம்பரம் பகுதியில் வெளிமாநிலங்களில் பதிவு செய்து தமிழகத்தில் வரி கட்டாமல் இயக்கப்படும் இருசக்கர வாகனங்கள் போலீசாரால் திங்கள்கிழமை பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் திருட்டை தடுக்கவும், வெளி மாநிலங்களில் பதிவு செய்து தமிழகத்தில் வரி கட்டாமல் இயக்கப்படும் வாகனங்களை பிடிக்கவும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் அஸ்வின் கோட்னீஷ் உத்தரவிட்டார். அதன் பேரில் சிதம்பரம், அண்ணாமலைநகர், கிள்ளை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை இன்ஸ்பெக்டர்கள் பி.சுப்பிரமண்யன், எம்.கே.கண்ணபிரான், ஜி.சுப்பிரமணியன் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது குஜராஜ், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டன.
கடலூர் போலீசார் ஆய்வு
கடலூர்:
புதுவை மாநிலத்தில் பதிவு செய்த இரு சக்கர வாகனங்களை கடலூர் போலீஸôர், ஞாயிறு, திங்கள் ஆகிய இருநாள்கள் ஆய்வு செய்தனர். கடலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் இரு சக்கர வாகனங்களில் 50 சதவீதம் வாகனங்கள் புதுவை மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டவை. வரி விதிப்புக் கொள்கையில் இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள வித்தியாசமே இதற்குக் காரணம். பிற மாநிலங்களைச் சேர்ந்த பலர் புதுவையில் போலியாக முகவரி கொடுத்து வாகனங்களைப் பதிவு செய்கிறார்கள். இதனால் தீவிரவாதிகள் உள்ளிட்ட பலருக்கும் வாகனங்கள் கிடைப்பது புதுவையில் எளிதாக இருக்கிறது. எனவே புதுவை மாநிலத்தில் பதிவு செய்து, கடலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் வாகனங்களை, மாவட்ட போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின்பேரில், கடலூர் மற்றும் பண்ருட்டி போலீஸ் உள்கோட்டங்களில் போலீசார் சோதனையிட்டனர். இந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பிடிபட்டன. அந்த வாகனங்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அவற்றில் போலியானவை எவை என்று போலீஸôர் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக