உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 04, 2010

பெண்ணாடத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு


திட்டக்குடி: 

                  பெண்ணாடத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

                   பெண்ணாடம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பொது சந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த கணபதி கடந்த சில மாதங்களுக்கு முன் ஆக்கிரமிப்பு செய்து பேரூராட்சி அனுமதி பெறாமல் கட்டடம் கட்டினார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுவற்றை டித்தனர். இது குறித்து கணபதி கொடுத்த புகாரின் பேரில் சேர்மன், கவுன்சிலர்கள் உள்ளிட்ட 19 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு போலீசார் வழக்குப் பதிந்தனர். சென்னை ஐகோர்ட்டில் அனைவரும் ஜாமீன் பெற்றனர். பொது சந்து பேரூராட்சிக்கு சொந்தமானது என்பதால் தாசில்தார் 145 உத்தரவு பிறப்பித்தார். அதையும் மீறி கட்டடம் கட்ட துவங்கியதால் பொதுமக்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றனர். இருப்பினும் பேரூராட்சி வடிகாலை இடித்து விட்டு கட்டடம் கட்டியதால் சாலை மறியல் அறிவிக்கப்பட்டதையடுத்து நேற்று முன்தினம் திட்டக்குடி தாலுகா அலுவலக வளாகத்தில் அமைதிக்குழு கூட்டம் நடந்தது. உடன்பாடு ஏற்படாததால் அறிவித்தபடி மறியல் போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவினர் அறிவித்தனர். இதøனையடுத்து டி.எஸ். பி.,க்கள் இளங்கோ, ராஜசேகரன் தலைமையில் போலீசார் குவிக்கப் பட்டனர்.

                         நேற்று காலை 10 மணிக்கு சேர்மன் அமுதலட்சுமி தலைமையில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க., - அ.தி. மு.க., - தே.மு.தி.க.,- பா.ஜ., - மா.கம்யூ., - இந்திய கம்யூ., - வி.சி.,யினர் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்களும் மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. டி.எஸ்.பி.,க்கள் இளங்கோ, ராஜசேகரன், தாசில்தார் கண்ணன் கியோர் பேச்சுவார்த்தை நடத்தி சட்ட ரீதியாக ஆக்கிரமிப்பை அகற்ற உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்ட குழுவினர் கலைந்து சென்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior