பண்ருட்டி:
பண்ருட்டி காய்கறி வியாபாரிகள் நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பண்ருட்டி நகரின் மையப் பகுதியில் ரத்தினம்பிள்ளை மார்கெட் இயங்கி வருகிறது. பண்ருட்டி சுற்று வட்டப் பகுதியில் பயிரிடப்படும் காய்கறிகளை, இங்குள்ள வியாபாரிகள் கமிஷன் அடிப்படையில் மொத்தமாக வாங்கி பல ஊரில் உள்ள வியாபாரிகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் தமிழகம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வரும் காய்கறிகளை வாங்கி நுகர்வோர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். நகரின் மையப்பகுதியில் மார்கெட் அமைந்துள்ளதால் அதிக அளவு மக்கள் வந்து செல்வர்.÷இதனால் சில காய்கறி வியாபாரிகள் சென்னை சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்தனர். இவர்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி காய்கறிகளை ஏற்றி இறக்கி வந்ததால் சென்னை-கும்பகோணம் சாலையில் அடிக்கடி போக்குவரத்து தடைப்பட்டது.
இந்நிலையில் பண்ருட்டி தட்டாஞ்சாவடியில் கட்டப்பட்டு செயல்படாமல் உள்ள உழவர் சந்தையை கடந்த மார்ச் மாதம் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், உழவர் சந்தை செயல்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதைத் தொடர்ந்து கடந்த சில நாள்களுக்கு முன்னர் கோட்டாட்சியர் தலைமையில் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் உழவர்கள் காய்கறிகளை உழவர் சந்தைக்குதான் கொண்டு செல்ல வேண்டும், சென்னை சாலை ஓரத்தில் வியாபாரிகள் காய்கறிகளை வாங்கவோ, ஏற்றி இறக்கவோ கூடாது என தீர்மானித்து மே 1-ம் தேதி முதல் உழவர் சந்தை செயல்படும் என முடிவெடுக்கப்பட்டது. இந்நிலை யில் திங்கள்கிழமை காலை போக்குவரத்திற்கு இடையூராக சென்னை சாலையில் வாகனங்களை நிறுத்தி காய்கறி ஏற்றிய வாகனங்களை பண்ருட்டி போலீஸôர் பறிமுதல் செய்தனர். இதனால் பாதிக்கப்பட்ட காய்கறி வியாபாரிகள் திடீர் என நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 5 நிமிடம் நடந்த மறியலால் சென்னை-கும்பகோணம் சாலையில் போக்குவரத்து தடை ஏற்பட்டது.÷த கவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி., பிரசன்னகுமார், இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் காலை 5 மணி முதல் 8 மணிவரையில் போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் ஒவ்வொரு வாகனமாக நிறுத்தி காய்கறிகளை ஏற்றி இறக்க வேண்டும். மாலை 2 மணி முதல் 4 மணி வரையில் உழவர் சந்தையில் கொள்முதல் செய்த காய்கறிகளை சிறிய வாகனத்தில் கொண்டு வந்து இறக்கிக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சாலையில் காய்கறி வாங்கி வியாபாரம் செய்யக் கூடாது. மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் வேளாண்மை வணிக துறை துணை வேளாண்மை இயக்குநர் என்.தனவேல், வேளாண்மை அலுவலர் என்.சுரேஷ், மாவட்ட தொழில் வர்த்தக சங்கத் தலைவர் டி.சண்முகம், செயலர் வி.வீரப்பன், காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.ராஜா உதயகுமார், பொருளர் பி.எஸ்.பி.லூர்துசாமி, துணைத் தலைவர் டி.மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பண்ருட்டி.மே 3: பண்ருட்டி காய்கறி வியாபாரிகள் நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பண்ருட்டி நகரின் மையப் பகுதியில் ரத்தினம்பிள்ளை மார்கெட் இயங்கி வருகிறது. பண்ருட்டி சுற்று வட்டப் பகுதியில் பயிரிடப்படும் காய்கறிகளை, இங்குள்ள வியாபாரிகள் கமிஷன் அடிப்படையில் மொத்தமாக வாங்கி பல ஊரில் உள்ள வியாபாரிகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர். மேலும் தமிழகம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வரும் காய்கறிகளை வாங்கி நுகர்வோர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். நகரின் மையப்பகுதியில் மார்கெட் அமைந்துள்ளதால் அதிக அளவு மக்கள் வந்து செல்வர். இதனால் சில காய்கறி வியாபாரிகள் சென்னை சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்தனர். இவர்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி காய்கறிகளை ஏற்றி இறக்கி வந்ததால் சென்னை-கும்பகோணம் சாலையில் அடிக்கடி போக்குவரத்து தடைப்பட்டது. இந்நிலையில் பண்ருட்டி தட்டாஞ்சாவடியில் கட்டப்பட்டு செயல்படாமல் உள்ள உழவர் சந்தையை கடந்த மார்ச் மாதம் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், உழவர் சந்தை செயல்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதைத் தொடர்ந்து கடந்த சில நாள்களுக்கு முன்னர் கோட்டாட்சியர் தலைமையில் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.÷இதில் உழவர்கள் காய்கறிகளை உழவர் சந்தைக்குதான் கொண்டு செல்ல வேண்டும், சென்னை சாலை ஓரத்தில் வியாபாரிகள் காய்கறிகளை வாங்கவோ, ஏற்றி இறக்கவோ கூடாது என தீர்மானித்து மே 1-ம் தேதி முதல் உழவர் சந்தை செயல்படும் என முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை போக்குவரத்திற்கு இடையூராக சென்னை சாலையில் வாகனங்களை நிறுத்தி காய்கறி ஏற்றிய வாகனங்களை பண்ருட்டி போலீஸôர் பறிமுதல் செய்தனர். இதனால் பாதிக்கப்பட்ட காய்கறி வியாபாரிகள் திடீர் என நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 5 நிமிடம் நடந்த மறியலால் சென்னை-கும்பகோணம் சாலையில் போக்குவரத்து தடை ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி., பிரசன்னகுமார், இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.÷இதில் காலை 5 மணி முதல் 8 மணிவரையில் போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் ஒவ்வொரு வாகனமாக நிறுத்தி காய்கறிகளை ஏற்றி இறக்க வேண்டும். மாலை 2 மணி முதல் 4 மணி வரையில் உழவர் சந்தையில் கொள்முதல் செய்த காய்கறிகளை சிறிய வாகனத்தில் கொண்டு வந்து இறக்கிக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சாலையில் காய்கறி வாங்கி வியாபாரம் செய்யக் கூடாது. மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வேளாண்மை வணிக துறை துணை வேளாண்மை இயக்குநர் என்.தனவேல், வேளாண்மை அலுவலர் என்.சுரேஷ், மாவட்ட தொழில் வர்த்தக சங்கத் தலைவர் டி.சண்முகம், செயலர் வி.வீரப்பன், காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.ராஜா உதயகுமார், பொருளர் பி.எஸ்.பி.லூர்துசாமி, துணைத் தலைவர் டி.மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக