பரங்கிப்பேட்டை:
பரங்கிப்பேட்டையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள 168 வீடுகளை நாளை 5ம் தேதி அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைக்கிறார். பரங்கிப்பேட்டை பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் ராஜிவ்காந்தி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் கொடிமரத்தெரு, ஆற் றங்கரை தெரு, மானம் பாடி உள்ளிட்ட பகுதிகளில் 6 கோடியே 20 லட் சத்து 56 ஆயிரம் மதிப் பில் 168 புதிய வீடுகள் கட்டப் பட்டது. இந்த புதிய வீடுகள் திறப்பு விழா நாளை 5ம் தேதி மாலை நடக்கிறது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்குகிறார். சேர்மன் முத்து பெருமாள் முன்னிலை வகிக்கிறார். பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ் வரவேற்கிறார். புதிய வீடுகளை குடிசை மாற்று வாரியம் மற்றும் இடவசதி கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் தங்கவேலன் திறந்து வைக்கிறார். அரசு நலத் திட்ட உதவிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் வழங்குகிறார். விழாவில் டி.ஆர்.ஓ., நடராஜன், திட்ட இயக்குநர் ராஜஸ்ரீ, கீரப்பாளையம் சேர்மன் செந்தில்குமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சடையப்பன், துணை சேர்மன் செழியன், செயல் அலுவலர் ஜீஜாபாய் பங்கேற்கின்றனர்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக