உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 04, 2010

கடலூரில் தார்சாலை போட நிதி இல்லாமல் 5 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள புறவழிச்சாலை


கடலூர்: 

                கடலூர் ஜவான்ஸ் பவன் அருகே 5 கோடி ரூபாய் மதிப்பில் போடப் பட்ட புறவழிச்சாலை நிதி பற்றாக்குறையால் மக்களுக்கு பயன்படாமல் கிடப்பில் கிடக்கிறது. கடலூர் நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு முன் கலெக்டராக இருந்த ககன்தீப் சிங் பேடி, ஜவான்ஸ் பவன் கட்டடத்தில் இருந்து செம்மண்டலம் வரையிலான கெடிலம் ஆற்றங்கரையில் புறவழிச்சாலை அமைக்க முயற்சி மேற்கொண்டார். புறவழிச்சாலைக்கு மட்டுமல்லாமல் ஆண்டு தோறும் கெடிலம் நதிக்கரையில் கரைபுரண்டு ஓடும் வெள்ளப் பெருக்கினால் சுப்ராயலு நகர், நெடுஞ்சாலை நகர், குப்பன்குளம் ஆகிய நகர்கள் வெள்ள நீரில் மூழ்கி தத்தளிக்கும் நிலையை தவிர்ப்பதற்காகவும் சுனாமி நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

                   திருப்பாதிரிப்புலியூர் ஜவான்ஸ் பவன் அருகில் இருந்து செம்மண்டலம் வரையிலான 1.8 கி.மீ., தூரத்தை பொதுப்பணித்துறை 40 லட்ச ரூபாய் மதிப்பில் அகலமான சாலை அமைத்து நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைத்தது. வெள் ளத்தின் போது பழுதாகாமல் இருக்க நெடுஞ்சாலைத்துறை மெட்டல் ரோடு போட்டது. நகராட்சி சார்பில் 'கான்கிரீட்' தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக இதுவரை ஐந்து கோடி ரூபாய் செலவிடப்பட்டு ஐந்து ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக தார் சாலை பணிகள் நடைபெறாததால் மக்களுக்கு பயன்படாமல் கிடப்பில் உள்ளது. இப்பணிக்காக 90 லட்ச ரூபாய் கேட்டு முன்மொழிவு அனுப்பப்பட் டுள்ளதோடு நிற்கிறது. 5 கோடி ரூபாய் செலவில் புறவழிச்சாலை அமைத்து தார் சாலை போடாததால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கலெக்டர், மக்கள் பிரதிநிதிகள் நிதி ஒதுக்கீடு பெற்றுத்தர முன்வந்து கடலூர் மக்கள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior