உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 04, 2010

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை மகா அபிஷேகம்


சிதம்பரம்: 

               சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு நாளை (5ம் தேதி) மகா அபிஷேகம் நடக்கிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவி லில் ஆண்டுக்கு ஆறு முறை நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. ஆண்டுக்கு இருமுறை ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனத்தின் போது ஆயிரங்கால் மண்டப முகப்பிலும், நான்கு முறை நடராஜர் வீற்றிருக்கும் சித்சபையின் எதிரில் உள்ள கனகசபையிலும் நடக்கிறது. சித்திரை மாதத்தில் நடக்கும் மகா அபிஷேகம் நாளை (5ம் தேதி) நடக்கிறது. அதையொட்டி அன்று அதிகாலை முதல் நடராஜர் கோவிலில் மகா ருத்ரயாகம், 126 பேர் ருத்ரபாரா யணம், 13 பேர் ஹோமம் செய்கின்றனர். காலை 8 மணிக்கு சித்சபையில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கனகசபையில் சிறப்பு பூஜைகளும், அதனை தொடர்ந்து மாலை 6 மணியிலிருந்து குடம், குடமாக பால், நெய், தேன், சந்தனம், இளநீர் மற்றும் விபூதி ஆகியவற்றால் இரவு 10 மணி வரை அபிஷேகம் நடக்கிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior