கிள்ளை:
கிள்ளையில் 25 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட அரசு இறால் பண்ணை பயன்படுத்தப்படாமல் சீரழிந்துள்ளது. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட் டுள்ளது. சிதம்பரம் அடுத்த கிள்ளை முழுக்குத் துறை - பட்டறையடி சாலை, சிந்தாமணியம்மன் கோவில் அருகில் 12.5 ஏக்கர் பரப்பளவில் தமிழக அரசு மீன் வளத்துறை சார்பில் இறால் பண்ணை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் துவக் கப்பட்டது. இந்த இறால் பண்ணை, கடல் மட்டத்தை கணக்கிட்டு, இன்ஜின் மற்றும் மின் செலவுகள் இல்லாமல், ஆற்று தண்ணீரை நிரப்பி இறால் வளர்க் கப்பட்டது. கடல் நீர் உள்வாங்கும் போது இறால் பண்ணையில் உள்ள இறால் குஞ்சுகள் வெளியில் செல்லாத வகையில் வலை கட்டி பாதுகாக் கப்பட்டது. இதனால் கடல் மற்றும் ஆறுகளில் இருந்து எளிதில் இறால் குஞ்சுகள் இறால் பண்ணைக்குள் செல் லும். ஆனால் வளர்க்கப்படும் இறால்கள் கடலுக்கு செல் லமுடியாது. இவ்வாறு இயற்கையோடு வளர்க்கப்படும் இறால்கள் மருத்துவ குணம் உடையதாகவும் இருந்தது.
இந்த பண்ணையில் இறால்களுடன், சில மீன்களும் பெருகியது. வெளி மாநில வியாபாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இறால்களை கூடுதல் விலைக்கு வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். இதனால் பலருக்கு மறைமுக வேலையும், அரசு சார்பில் சிலருக்கு நேரடி வேலை வாய்ப்பும் கிடைத்தது. இறால் பண்ணை துவங்கிய காலத்தில் கடலில் கிடைக் கும் இறால்களை விட, மூலிகை காடுகள் சூழ்ந்த இறால் குட்டைகளில் வளர்க் கப்பட்ட இறால்கள் கிலோ ஒன்று 200 முதல் 300 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப் பட் டது. இதனால் மீன்வளத் துறை மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைத்தது. தனி நபர்களை இறால் வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் வகையில் கவனத்தை ஈர்த்த இந்த அரசு இறால் பண்ணை தற்போது முற்றிலும் சேதமடைந்து பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
அலுவலக கட்டடம் இடிந்து விழுந்து, அலுவலகத்தின் உள்ளே உள்ள பொருட்கள் சேதமடைந்தும், மின்சாரம் துண்டிக்கப்பட்டும் தற்போது அந்த அலுவலகத் தில் விஷ ஜந்துகள் நடமாட் டம் அதிகரித்துள்ளது. இதனால் மீன் ஆய்வாளர், காவலாளி உள்ளிட்ட பணியில் இருந்த மூவர் தற்போது அப்பகுதிக்கு செல்லாமல், சிதம்பரம் அலுவலகத்தில் உள்ளனர். பணியாளர்களுக்கு அரசு வழங்கும் சம்பளத்திற்கு கூட இந்த இறால் பண்ணையால் எவ்வித வருவாயும் இல்லை. கடலூர் மாவட்ட அளவில் முதன்முதலில் துவங்கப்பட்ட இறால் பண்ணையை மீண்டும் புதுப்பித்து பராமரித்தால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக