உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 04, 2010

ஊராட்சிகளுக்கு நிர்மல் கிராம் புரஷ்கார் விருது சம்பிரதாயமானது!: விதிமுறைகளை பின்பற்றாத அவலம் தொடர்கிறது


விருத்தாசலம்: 

                  நிர்மல் கிராம் புரஷ்கார் விருதுக்கு தேர்வு பெறற ஊராட்சிகள் விதிகளை முழுமையாக பின்பற்றவில்லை என்ற குற்றம் சாட்டு எழுந்துள்ளது.

                  கிராமங்களில் சுகாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஜனாதிபதியால நிர்மல் கிராம் புரஷ் கார் விருது வழங்கப்படுகிறது. இத்திட்டம் மத்திய அரசால் கடந்த 2003ம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டு 2005ம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் ஊராட்சிக்கு மக்கள் தொகை அடிப்படையில் சுகாதாரம் தொடர்பான வளர்ச்சி பணிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம். ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிவறைகள் கட்டி அதனை அனைத்து உறுப்பினர்களும் பயன்படுத்தி வரவேண்டும். வீடுகளில் தனி நபர் கழிவறையின்றி சமுதாய சுகாதார வளாகங்களை பயன்படுத்துவராயின் ஒவ்வொரு கழிவறைக்கும் மூன்று குடும்பங்களுக்கு ஒரு கழிவறை ஒதுக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்க வேண்டும்.

                    அதுபோல் அனைத்து அரசு மற்றும் நிதியுதவி பெறும் தனியார் மற்றும் நிதியுதவி பெறாத பள்ளிகளிலும், குழந்தைகள் நல மையத்திலும் சுத்தமான கழிவறைகளுடன் சிறுநீர் கழிப்பிட வசதியும், மாணவ, மாணவிகளுக்கு தனி த்தனியே இருக்க வேண்டும். குறிப்பாக திறந்த வெளி கழிப் பிடம் முற்றிலும் ஒழிக்கப்பட்டிருக்க வேண்டும். இடம் விட்டு இடம் செல்பவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எவரும் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தக் கூடாது. விருதுக்கு விண்ணப்பிக்கும் ஊராட்சிகள் திறந் தவெளி கழிப்பிடம் தடை செய்துள்ளதற்கு கிராம சபாவில் தீர்மானம் நிறைவேற்றி, அதை கண் காணிக்க அமைப்பும் ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதுபோல் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து எடுத்து அதனை முறையாக அகற்றக்கூடிய அமைப்பு ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஊராட்சி எல்லைக்குள் பொது இடங்களில் குப் பைகள் கொட்டியிருக்கக் கூடாது. தண்ணீர் தேங்கியிருக்கக் கூடாது. சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் ஆகியவை இதற்கான தகுதிகள்.

                      மேற்கண்ட தகுதிகளுடன் விண்ணப்பிக்கும் ஊராட்சிகளை மாநில அரசு பரிசீலித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய் யும். பரிந்துரை செய்யப்படும் ஊராட்சிகளை மத்திய அரசு 30 சதவீதம் மறு ஆய்வு செய்து விருதுக்கு தேர்வு செய்கிறது. அவ் வாறு தேர்வு செய்யப்படும் ஊராட்சிகளுக்கு நிர்மல் கிராம் புரஷ்கார் விருது வழங்கப்படுகிறது. துவக்கத்தில் இந்த விருது டில்லியில் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது. தற்போது அந்தந்த மாவட்ட கலெக்டர்களே வழங்கி வருகின்றனர். இவ்வாறு விருதுகள் பெறும் ஊராட்சிகளில் விருதுக்கான தகுதிகள் 20 சதவிகிதம் கூட நடைமுறைப்படுத்தவில்லை என்ற குற்றம் சாட்டு எழுந் துள்ளது.

                  'கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் தனி நபர் கழிவறைகள் சாத்தியமில்லை என்றாலும், அவர்கள் ஊரில் உள்ள பொது சுகாதார மையத்தையாவது பயன்படுத்த வேண்டும். ஆனால் விருதுகள் பெற்ற பெரும்பாலான ஊராட்சிகளில் எப்போதும் போல் பொதுமக்கள் ஊருக்கு ஒதுக்கு புறமாக இருக்கும் திறந்த வெளிகளையே கழிப் பிடமாக பயன்படுத்துகின்றனர். பொது சுகாதார மையங்கள் பெரும்பாலும் பூட்டியே கிடப்பதாலும், முழுமையான தண்ணீர் வசதி இல்லாததாலும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதுபோல் பொதுமக்கள் குப்பைகளை கொட்ட தொட்டிகளும் இல்லை, அவைகளை சேகரித்து முறையாக எந்த ஊராட்சியும் அகற்றுவதும் இல்லை. அதிகாரிகள், சட்டத்தை பின் பற்ற வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் சில ஊராட்சிகளை பெயரளவிற்கே தேர்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்கின்றனர். மத்திய குழுவினர் ஆய்வுக்கு வரும் போது பள்ளி போன்ற குறிப்பிட்ட இடங்களை மட்டுமே காட்டுகின்றனர். மத் திய குழுவினரும் பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் அதிகாரிகளை நம்பி தேர்வு செய்கின்றனர். எனவே மத்திய அரசு வழங் கும் நிர்மல் கிராம் புரஷ்கார் விருது ஒரு சம்பிரதாய நடவடிக்கையாக மட்டுமே உள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior