உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 04, 2010

எம்.எல்.ஏ.,க்களுக்கு பிரத்தியேக இ-மெயில் முகவரி


        பொதுமக்கள், தங்கள் குறைகளை எம்.எல்.ஏ.,க்களிடம் இ-மெயில் மூலம் தெரிவிக்க வசதியாக, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,விற்கும் பிரத்தியேக இ-மெயில் முகவரி ஏற்படுத்தித் தரப்படும்' என, அமைச்சர் பூங்கோதை அறிவித்தார்.

சட்டசபையில் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கையின் போது, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

* தலைமைச் செயலகத்தில் உள்ள துறைகளில் கோப்புகளை விரைவாக கையாளவும், நிர்வாகத்தை துரிதப்படுத்தவும் வசதியாக மின்னணு அலுவலக தொகுப்பு உருவாக்கப்படும். கலெக்டர் அலுவலகங்களில் கோப்புகளை திறம்பட கையாள இதேபோன்ற மின்னணு அலுவலக தொகுப்பு உருவாக்கப்படும்.

* மூன்று ஆண்டுகளுக்கான மின்ஆளுமை திட்டத்தை, தெளிவான வழிமுறைகளுடன் உருவாக்கும்படி, அனைத்து துறைகளும் கேட்டுக்கொள்ளப்படும்.

* தமிழ் மொழியின் வளர்ச்சி கருதியும், அதன் பயன்பாட்டை இணையதளத்தில் அதிகப்படுத்தவும் தமிழ் குறியீட்டின் தரமான ஒருங்குறி (யுனிகோட்) ஏற்படுத்தப்படும்.

* விழுப்புரத்தில் உள்ள சிப்காட் தொழில்பூங்காவில், தகவல் தொழில்நுட்பவியல் பூங்கா அமைக்கப்படும்.

* நீலகிரி மாவட்டத்தில் இணையதள வசதிகளை பெற கம்பியில்லா இணைப்பு, தேவையுள்ள இடங்களில் வழங்கப்படும்.

* தமிழ் இணைய மாநாட்டின் கீழ் தகவல் பக்கங்களை திரட்டும் விதமாக கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்களிடமிருந்து போட்டி தகவல் பக்கங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதுபோன்ற ஆன்-லைன் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும்.

* தமிழ்நாடு மின் ஆளுகை முகமை அவ்வப்போது, ஒரு மின் ஆளுகை செய்தி மடலை வெளியிட உள்ளது. இச்செய்தி மடலில் மின் ஆளுமை செயல்பாடுகளில் கடைபிடிக்கப்படும் சிறந்த வழிமுறைகள், தமிழகம், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் செயல்படுத்தப்பட்டுவரும் குடிமக்களை மையமாகக் கொண்டுள்ள சேவைகள் பற்றி செய்திகள் இடம்பெறும்.

* அகராதிகளை இணையதளத்தில் இலவசமாக உபயோகிக்கும் திட்டம் விக்ஷ்னரி எனப்படுகிறது. பன்னாட்டு தமிழ் பயிற்சி இணையத்தால் வெளியிடப்பட்ட கலைச்சொல் பேரகராதியை அனைவரும் பயன்படுத்தும் வகையில், விக்ஷ்னரியில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* மின்னணு வடிவில் உள்ள அனைத்து சேவைகளும் மக்கள் கணினி மையங்கள் மூலமாகவும் வழங்கப்படும்.

* பொதுமக்கள் தங்கள் குறைகளை எம்.எல்.ஏ.,க்களிடம் இ-மெயில் மூலம் தெரிவித்து, அவற்றை நிவர்த்தி செய்து கொள்ளவும், மக்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்யவும், ஒவ்வொரு எம்.எல்.ஏ.,விற்கும் பிரத்தியேக இ-மெயில் முகவரி ஏற்படுத்தித் தரப்படும்.

* இன்று தமிழகம் தான் மொபைல் போன் பயன்பாட்டில் முதலிடம் வகிக்கிறது. அரசு சார்ந்த தகவல்கள், திட்டங்கள் போன்றவற்றை மக்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பியோ, பேசியோ தெரிந்து கொள்வதற்காக மொபைல் ஆளுமை திட்டத்தை 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வெகுவிரைவில் அறிமுகப்படுத்தவுள்ளோம். இத்திட்டத்தை செயல்படுத்தப் போகும் நிறுவனமும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளது.இவ்வாறு அமைச்சர் பூங்கோதை அறிவித்தார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior