உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 04, 2010

தமிழக இளைஞர்கள் மாவோயிஸ்டுகளாக மாற வாய்ப்பு: எம்.பி., பாலகங்கா பகீர்


திட்டக்குடி: 

                விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை காரணமாக தமிழக இளைஞர்கள் மாவோயிஸ்டுகளாக மாற வாய்ப்புள்ளது என எம்.பி., பாலகங்கா பேசினார். பெண்ணாடத்தில் கடலூர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற் சங்கம் சார்பில் மே தின பொதுக் கூட்டம் நடந்தது. அம்பிகா சர்க்கரை ஆலை அண்ணா தொழிற் சங்க செயலாளர் வாசு ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தொழிற் சங்க தலைவர் ராஜகோபால், என்.எல்.சி., தலைவர் அபு, போக்குவரத்துக்கழக தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட கட்டடப்பிரிவு செயலாளர் தர்மராஜ் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மதியழகன், நல்லூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் அருண் மொழித்தேவன், செல்வி ராமஜெயம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அ.தி.மு.க., தேர்தல் பிரிவு இணை செயலாளர் எம்.பி., பாலகங்கா பேசியதாவது: 

                 தொழிற் சங்க பிரிவை உருவாக்கி சின்னமும், கொடியும் வழங்கியவர் எம்.ஜி. ஆர்., தான். இதனால் மே தினத்தை கொண்டாட தகுதியான கட்சி அ.தி.மு.க., மட்டுமே.  ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ள விலைவாசி உயர்வு குறித்து கேட்டால், வாங்கும் சக்தி மக்களிடம் உயர்ந்துள்ளதாக கேலியாக அன்பழகன் பதில் சொல்கிறார். பெரு வணிகர்களுக்கு உடனடி மின்சாரம், விவசாயிகளுக்கோ தொடர் மின்வெட்டு. இதுதான் தி.மு.க., அரசின் இன்றைய நிலை. 2011ல் தி.மு.க., 30 இடங்களில் கூட ஜெயிக்க வாய்ப் பில்லை. விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை காரணமாக தமிழக இளைஞர்கள் மாவோயிஸ்டுகளாக மாற வாய்ப்புள்ளது. இவ்வாறு எம்.பி., பாலகங்கா பேசினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior