மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மாற்றுத் திறனாளிகள்
கடலூர்:
கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை, பஸ் நிலையத்துக்கு அருகே மாற்ற வேண்டும் என்று, கடலூர் மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்றச் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இச்சங்கத்தின் தலைவர் சி.கே.சந்தோஷ், செயலர் மனோகர், பொருளர் செந்தில்ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் மாற்றுத் திறனாளிகள் சிலருடன் வந்து, திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:
வெளியூர்களில் இருந்து கடலூர் வரும் மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு எளிதாகச் சென்று அலுவலர்களைச் சநதிக்க ஏதுவாக, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை பஸ் நிலையத்துக்கு அருகே மாற்ற வேண்டும். மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் குடிக்கத் தண்ணீர் வைக்க வேண்டும்.மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கிகளில் ஜாமீன் இன்றி கடன் வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியில் இருந்து, சாதிவேறுபாடு பார்க்காமல், மாதம் ஒரு மாற்றுத் திறனாளிக்கு தொழில் தொடங்க நிதி உதவி செய்ய வேண்டும். திருமண உவித்தொகை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் நிதி வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதித் திட்டத்தில், கணக்கு எழுதும் பணி மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தன.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக