உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 14, 2010

பிளஸ் 2: ஜூன் 29-ல் உடனடித் தேர்வு:

                      பிளஸ் 2 தேர்வில் மூன்று அல்லது அதற்குக் குறைவான பாடங்களில் தோல்வியுறும் மாணவர்கள் உடனடித் தேர்வு எழுதலாம். உடனடித் தேர்வு ஜூன் 29-ம் தேதி தொடங்கி, ஜூலை 9-ம் தேதி வரை நடைபெறும்.

இதுகுறித்து அதன் இயக்குநர் வசுந்தராதேவி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: 

              மார்ச் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வை 7,43,822 பேர் எழுதினர். இத்தேர்வர்களின் தேர்வு முடிவுகளை வெள்ளிக்கிழமை (மே 14) காலை 9 மணிக்கு, அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட உள்ளார். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடங்கிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல், தேர்வு முடிவுடன் அவர்கள் பயின்ற பள்ளியில் மே 14-ம் தேதி காலை 10 மணிக்குள் ஒட்டப்படும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க மே 17-ம் தேதி முதல்  மே 20-ம் தேதி வரை அரசுத் தேர்வுகள் இயக்ககம், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வு மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும். 

விடைத்தாள் நகல்: 

             தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய எந்தவொரு பாடத்திற்கும் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்கலாம்.மொழிப் பாடம் மற்றும் ஆங்கிலம் ஒவ்வொன்றிற்கும் ரூ.550-ம், இதர பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.275-ம் கட்டணமாக வசூலிக்கப்படும். 

மறுகூட்டல்: 

             தேர்வு எழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிப்பவர்கள் அதே பாடத்திற்கு மறுகூட்டல் கோரி தற்போது விண்ணப்பிக்கத் தேவையில்லை. விடைத்தாள் நகல் கிடைக்கப் பெற்ற பிறகு, விரும்பினால் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். 

மறுகூட்டலுக்கான கட்டணம்: 

                   மறுகூட்டலுக்கு கட்டணம் முதன்மை மொழி, ஆங்கிலம், உயிரியல் ஆகிய பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.305-ம், இதர பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.205-ம் வசூலிக்கப்படும்.விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத் தொகையினை தேசியமயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் சென்னையில் மாற்றத்தக்க வகையில்  Dire​ctor of Government Ex​amin​ations,Chennai -6 என்ற பெயரில் எடுக்கப்பட்ட வங்கி வரைவோலையாக நேரில் ஒப்படைத்து விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேற்கூறிய அலுவலகங்களில் நேரில் ஒப்படைக்க வேண்டும். 

மறுமதிப்பீடு: 

                 விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விரும்பினால் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்ற பின் மறுமதிப்பீடு அல்லது மறுகூட்டலுக்கு விண்ணபிக்க விரும்புவோர், விடைத்தாள் நகல் பெற்ற 5 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மறுமதிப்பீடு கட்டணம் முதன்மை மொழி மற்றும் ஆங்கில மொழி பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.1010, இதர பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.505 ஆகும்.மறுகூட்டலுக்கு கட்டணம் முதன்மை மொழி, ஆங்கிலம், உயிரியல் பாடத்திற்கு ரூ.305-ம், இதர பாடங்களுக்கு ரூ.205-ம் ஆகும். இதற்கான அறிவுரைகள் விடைத்தாள் நகலுடன் இணைத்து அனுப்பப்படும்

உடனடித் தேர்வு: 

              மார்ச் 2010ல் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் மூன்று அல்லது அதற்குக் குறைவான பாடங்களில் தோல்வியுற்றவர்கள் ஜூன்-ஜூலை 2010-ல் நடைபெற உள்ள மேல்நிலைச் சிறப்புத் துணைத் தேர்வு எழுதலாம். இதற்கான விண்ணப்பங்கள் மே 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை வழங்கப்படும்.பள்ளி மாணவராகத் தேர்வெழுதியவர்கள் அவர்கள் பயின்ற பள்ளியில் எஸ்எச் வகை விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து, அந்தந்த பள்ளிகளிலேயே மே 21-ம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தினைப் பணமாகப் பள்ளியில் செலுத்த வேண்டும்.

தேர்வுக் கட்டணம்:  

                ஒரு பாடத்திற்கு ரூ.85, இரண்டு பாடங்களுக்கு ரூ.135, மூன்று பாடங்களுக்கு ரூ.185 கட்டணமாகப் பெறப்படும். மார்ச் 2010-ல் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத தனித் தேர்வர்களும், மார்ச் 2010-க்கு முந்தைய பருவங்களில் தேர்வு எழுதி தோல்வியுற்ற தனித்தேர்வர்களும் ஜூன்-ஜூலை 2010 சிறப்புத் துணைத் தேர்வு எழுத விரும்பினால் அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்களில் மே 24-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரை விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அரசு தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தில் மே 28-ம் தேதிக்குள் சேரும் வகையில் பதிவு அஞ்சலிலோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன், மதிப்பெண் சான்றிதழ் நகல் அல்லது இணையதளம் மூலம் பெறப்பட்ட மதிப்பெண் பட்டியல் நகலை இணைக்க வேண்டும். 

இணை​ய​த​ளத்​தி​லும் பிளஸ் 2 முடிவு​ 

              தேர்வு முடி​வு​களை இணை​ய​த​ளம் மூலமும் அறிந்து கொள்ள ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.​ 

இணை​ய​தள முக​வரி விவ​ரம்:​​
  1. www.din​am​ani.com
  2. www.pallik​alvi.in
  3. tnresults.nic.in
  4. dge1.tn.nic.in
  5. dge2.tn.nic.in
  6. dge3.tn.nic.in
மே 26-ல் மதிப்பெண் சான்றிதழ் 

                 மதிப்பெண் சான்றிதழ்கள் மே 26-ம் தேதி, அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் இருந்து மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior