உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 14, 2010

கைதியை காரில் கட்டிப் போட்டு கடலை ரசித்த கர்நாடக போலீசார்

கடலூர் : 

                 கைதியை காரில் கட் டிப்போட்டுவிட்டு கர்நாடக போலீசார், கடலூர் சில்வர் பீச்சில் கடல் அலையை ரசிக்கச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் சில்வர் பீச்சில் நேற்று காலை 8 மணிக்கு கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட ஸ்கார்பியோ கார் நின்றிருந்தது. காருக்குள்  ஒருவர் சங்கிலியில் கட்டப்பட்டிருந்தார்.

                   ஸ்கார்பியோவில் இருந்து இறங்கிய ஆறு பேர், சில்வர் பீச்சில் கடல் அலையை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது காரில் சங்கிலியால் கட்டப்பட்டிருந் தவரை பார்த்த ஒருவர், தேவனாம்பட்டினம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதற்கிடையே அந்த ஆறு பேர், காரில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். தேவனாம்பட்டினம் போலீசார் கொடுத்த தகவலின் பேரில், நெடுஞ் சாலை ரோந்து போலீசார் கடலூர் பாரதி ரோட்டில் ஸ்கார்பியோவை மடக்கி பிடித்து, புதுநகர் போலீசில் ஒப்படைத்தனர்.இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ்  காரில் வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். காரில் இருந்தவர்கள்  கர்நாடக மாநிலம் பெங்களூரு  போலீசார் என்பது விசாரணையில் தெரியவந்தது. காரில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தவர் இம்பால் பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் கைது செய் யப்பட்ட, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் ராஜேஷ்(21) என்பது தெரியவந்தது. ராஜேஷ் திருடிய பொருட்கள் கடலூர் மாவட்டத்தில் ஒருவரிடம் விற் றுள்ளார்.

                     அப்பொருட்களை மீட்பதற்காக கர்நாடக போலீசார் நேற்று ராஜேஷை கடலூர் அழைத்து வந்துள்ளனர். அப் போது கடலூர் சில்வர் பீச்சை பார்ப்பதற்காக தேவனாம்பட்டினத்திற்கு சென்றுள்ளனர். கைதி தப்பிச் செல்லாமல் இருக்க, சங்கிலியால் காரில் கட்டிப் போட்டுவிட்டு, கடல் அலையை ரசித்துவிட்டு திரும்பிய விவரம் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior