உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 14, 2010

ஆயிரம் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லை ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் தகவல்

கடலூர்:

               தமிழகத்தில் 1,000 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லை என, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் அப்துல் மஜீத் கூறினார். 

கடலூரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் அப்துல் மஜீத் கூறியதாவது:

               தமிழகத்தில் அரசு ஒன்றிய, நகராட்சி, அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளிகள் 37 ஆயிரமும், நடுநிலைப் பள்ளிகள் 7,000 உள்ளன. ஆனால் ஆரம்ப, நடுநிலை, மெட்ரிக் பள்ளிகள் 53 ஆயிரம் உள்ளன. இதற்கு அனுமதியும் வழங்கி அரசே கட்டணக் கல்வியை அனுமதித்துள்ளது.சட்ட ரீதியாக இலவச கல்வி வழங்குவது மாநில அரசின் கடமை.

                இலவச ஆரம்ப கட்டாய கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும். கட்டணக் கல்வியை ரத்து செய்ய வேண்டும். ஒரு ஆசிரியருக்கு 24 மாணவர்கள் என்றிருந்தது தற்போது 30 முதல் 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதை காரணம் காட்டி இந்தாண்டு 5,000 ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. கோர்ட் உத்தரவுபடி, வகுப்பிற்கு ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும்.தமிழகத்தில் 1,000 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லை.

                   9,011 பள்ளிகளில் 5, 10, 15 என மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த காலை உணவுத் திட்டத்தை கொண்டுவர வேண்டும்.மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்க வேண்டும். மெட்ரிக் பள்ளிகளை ரத்து செய்ய வேண்டும். சமச்சீர் கல்விக்கான முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு பாடப் புத்த கங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. இக்கோரிக்கைகள் அனைத்தும் ஜூன் 15ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அப்துல் மஜீத் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior