உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 14, 2010

பி.இ. சேர குறைந்தபட்ச மதிப்பெண் விரைவில் அறிவிப்பு: அமைச்சர் க. பொன்முடி


 
              பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணை குறைப்பது குறித்து ஒரு வாரத்தில் அரசு அறிவிப்பு வெளியிடும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார். 

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி பேசியது:

                 இரண்டு நாள்களுக்கு முன்பு தனியார் பொறியியல் கல்லூரிகளின் தாளாளர்கள், முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினோம். தமிழகத்தில் 548 தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. கடந்த ஆண்டு 30,501 இடங்கள் காலியாக இருந்தன. எனவே, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாலே பொறியியல் கல்லூரிகளில் சேர அனுமதிக்க வேண்டும் என்று தனியார் கல்லூரி நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இப்போது பொது பிரிவினருக்கு 55, பிற்படுத்தப்பட்டோருக்கு 50, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 45 என்று குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 35 மதிப்பெண்கள் என்ற நிலை உள்ளது. இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது மாற்றம் இருக்கும். இது குறித்து முதல்வருடன் கலந்துபேசி ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும்.

பாலபாரதி (மார்க்சிஸ்ட்):

           எல்லோரும் பொறியியல் படிக்க சென்று விட்டால் மற்ற கலை, அறிவியல் பாடங்களை படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். எனவே, குறைந்தபட்ச மதிப்பெண்ணைப் பொறுத்தவரை இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும். 

அமைச்சர் பொன்முடி: 

               தமிழகத்தில் உள்ள 67 கலை, அறிவியல் கல்லூரிகளில் இரண்டு ஷிப்டு முறையில் வகுப்புகள் நடக்கின்றன.  இந்தக் கல்லூரிகளில் இடம் இல்லை என்ற நிலைதான் உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior