உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 14, 2010

நடராஜர் கோயிலில் ஓராண்டில் ரூ.21 லட்சம் உண்டியல் வசூல்


சிதம்பரம்:
 
                சிதம்பரம் நடராஜர் உண்டியல் வைக்கப்பட்டு ஒரு வருடம் 2 மாதத்தில் இதுவரை 7 முறை உண்டியல் எண்ணியதில் மொத்தம் ரூ.21 லட்சத்து 20 ஆயிரத்து 486 கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாக அலுவலர் தெரிவித்தார் .நடராஜர் கோயிலை உயர் நீதிமன்ற ஆணைப்படி இந்து அறநிலையத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி கையகப்படுத்தி நிர்வாக அலுவலரை நியமித்தது. 2009-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி சித்சபை எதிரே முதன்முதலாக கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டது. அதன்பின்னர் படிப்படியாக மொத்தம் 9 உண்டியல்கள் வைக்கப்பட்டன. இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஆர்.ஜகந்நாதன், செயல்அலுவலர் க.சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் 7-வது முறையாக உண்டியல் எண்ணப்பட்டது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் மற்றும் அறநிலையத்துறை ஊழியர்கள் இப் பணியில் ஈடுபட்டனர். சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணுசாமி, வசந்தகுமாரி ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நடராஜர் கோயிலின் 9 உண்டியல்கள் எண்ணப்பட்டதில் ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்து 251 கிடைத்தது என்று செயல்அலுவலர் க.சிவக்குமார் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior